ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - யார் இந்த கயாடு லோகர்?

Published : Feb 28, 2025, 05:43 PM IST

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆன நடிகை கயாடு லோகர் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
17
ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - யார் இந்த கயாடு லோகர்?

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகி தமிழில் சக்கைப்போடு போட்டு வரும் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் கயாடு லோகர்.

27
Kayadu Lohar

நடிகை கயாடு லோகர் அசாமை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. இவர் டிராகன் படம் மூலம் பேமஸ் ஆனாலும் இவர் சினிமாவில் கடந்த 2021ம் ஆண்டே அறிமுகமாகிவிட்டார். இவர் முதன்முதலில் நடித்த படம் முகில்பேட். கன்னட படமான இதில் நடிக்கும் போது நடிகை கயாடு லோகருக்கு வெறும் 20 வயது தான்.

37
Kayadu Lohar Hit Movies

முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த கயாடு லோகர் தமிழில் அறிமுகம் ஆகும் முன்னரே கன்னடம், மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் நடித்துவிட்டார். இத்தனை மொழிகளில் நடித்திருந்தாலும் கயாடு லோகருக்கு அடையாளம் கொடுத்தது தமிழில் அவர் நடித்த டிராகன் திரைப்படம் தான்.

47
Dragon Heroine Kayadu Lohar

டிராகன் படம் தான் தமிழில் அவருக்கு அறிமுக படமாகும். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பல்லவி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக நடிப்பில் எந்தவித பந்தாவும் இன்று பார்த்தவுடன் பிடிக்கும்படியான ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார் கயாடு லோகர்.

இதையும் படியுங்கள்... அஜித்தை மிஞ்சிய பிரதீப்; பாக்ஸ் ஆபிஸில் விடாமுயற்சியை ஓட ஓட விரட்டிய டிராகன்!

57
Kayadu Lohar Upcoming Movies

சோசியல் மீடியா முழுக்க அவரைப்பற்றி தான் பேச்சு உள்ளது. டிராகன் படத்தின் வெற்றிக்கு பின் கயாடு லோகருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இவர் பிகினி அணிந்தும் நடிக்க ரெடியாக இருப்பதாக கவர்ச்சி வேடங்களிலும் கயாடுவை விரைவில் பார்க்கலாம்.

67
Tamil Actress Kayadu Lohar

தமிழில் நடிகை கயாடு லோகர் கைவசம் இதயம் முரளி என்கிற திரைப்படம் உள்ளது. இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளதோடு, இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார்.

77
Kayadu Lohar Photos

கயாடு லோகருக்கு தெலுங்கு திரையுலகிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். தெலுங்கில் ஸ்ரீலீலா நடிக்க இருந்த 3 படத்தில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கயாடுவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படி டிராகன் என்கிற ஒரே படம் கயாடுவின் வாழ்க்கையை ஓஹோனு மாற்றி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... மீண்டும் AGS, அஸ்வத், பிரதீப் காம்போவில் புதிய படம் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories