துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆனது. எந்த தென்னிந்திய படமும் படைத்திராத ஒரு புதிய சாதனையை லக்கி பாஸ்கர் படைத்துள்ளது.
25
Lucky Baskhar
“லக்கி பாஸ்கரோட மைண்ட் கேம் டிஜிட்டல்லயும் பெரிய சாதனை பண்ணுது. நெட்பிளிக்ஸ்ல 13 வாரம் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆன முதல் தென்னிந்திய சினிமா இதுதான்”னு துல்கர் நடிச்ச படத்தோட தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டெயின்மென்ட் எக்ஸ்ல போஸ்ட் பண்ணிருக்காங்க. துல்கரோட கரியர்ல முதல் 100 கோடி படம் லக்கி பாஸ்கர். இதுவரைக்கும் இந்த படத்தோட வசூல் 110 கோடிக்கு மேல. தியேட்டர்ல ரிலீஸ் ஆகி 29 நாள் கழிச்சு ஓடிடில வந்துச்சு இந்த படம்.
35
Lucky Baskhar dulquer salmaan
இந்த படம் பண மோசடிய பத்தி பேசுற ஒரு பீரியட் கிரைம் டிராமா. ஒரு சாதாரண பேங்க் ஊழியர்ல இருந்து துல்கர் எப்படி பெரிய பணக்காரன் ஆகுறாருங்குறத இந்த படம் காட்டுது. கேரளா உட்பட எல்லா தென்னிந்திய மாநிலத்துலயும் இந்த படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. வெளிநாடுகளிலும் நல்லா போச்சு.வெங்கி அட்லூரி கதை எழுதி டைரக்ட் பண்ணிருக்காரு. மீனாட்சி சவுத்ரி ஹீரோயினா நடிச்சிருக்காங்க. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைச்சிருந்தாரு.
தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகள்ல இந்த படம் ரிலீஸ் ஆச்சு. சூர்யதேவரா நாகவம்சி, சாய் சௌஜன்யா இவங்க சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபார் சினிமாஸ் மூலமா தயாரிச்சிருக்காங்க. கேரளாலயும், கல்ஃப்லயும் துல்கர் சல்மானோட வேஃபேரர் ஃபிலிம்ஸ் இந்த படத்த விநியோகம் பண்ணிருந்தாங்க. கடந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயனோட அமரன் படத்துக்கு போட்டியா ரிலீஸ் ஆச்சு.
55
Lucky Baskhar Netflix record
சிவகார்த்திகேயனோட அமரன் படமும் பாக்ஸ் ஆபிஸ்ல பட்டைய கிளப்புச்சு. அதற்கு செம டஃப் கொடுத்த லக்கி பாஸ்கர் படமும் வசூல் வேட்டை ஆடுச்சு. பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கு பின்னர் இப்போ நெட்பிளிக்ஸ்லையும் லக்கி பாஸ்கரோட ரெக்கார்டு தொடருது. அதன்படி நெட்பிளிக்ஸ்ல 13 வாரம் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகுற முதல் தென்னிந்திய படம் என்கிற சாதனையை பண்ணிருக்கு இந்த படம். இந்த சாதனையை துல்கர் சல்மான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.