சினிமாவில் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோரைப் பற்றி தான் அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர்களைத் தாண்டி ஒரு படத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் தயாரிப்பாளரை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு படம் பிரம்மாண்டமாக உருவாகிறது என்றால் அதற்கு மிகமுக்கிய காரணம் தயாரிபபாளர்கள் தான். அவர்கள் தாராள மனசோடு செலவிட்டால் தான் திரையிலும் அந்த பிரம்மாண்டம் எதிரொலிக்கும். அப்படி கோலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஜீரோ பிளாப் தயாரிப்பு நிறுவனமாக ஏஜிஎஸ் பற்றி தான் பார்க்க உள்ளோம்.
24
AGS Hit Movies
சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த திருட்டுப்பயலே படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது ஏஜிஎஸ் நிறுவனம். இதையடுத்து சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம் என பல கிளாசிக் ஹிட் படங்களை தயாரித்த இந்நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டு வரை வெற்றி தோல்விகளை கலந்து சந்தித்து வந்தது. ஆனால் 2015-ம் ஆண்டுக்கு பின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
2015-ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடித்த தனி ஒருவன் படத்தில் இருந்து வெற்றி வேட்டையை தொடங்கிய ஏஜிஎஸ் நிறுவனம், அடுத்தடுத்து கவண், திருட்டுப் பயலே 2, விஜய் நடித்த பிகில், சதீஷின் நாய் சேகர், பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே, சதீஷின் காஞ்சூரிங் கண்ணப்பன், தளபதி விஜய்யின் கோட் வரிசையில் தற்போது பிரதீப் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படமும் அந்த ஹிட் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது.
44
AGS Upcoming Movies
ஏஜிஎஸ் நிறுவனத்தின் இந்த தொடர் வெற்றிக்கு அவர்களின் வித்தியாசமான கதை தேர்வும், நேர்த்தியான புரமோஷனும் தான் காரணம். அதுமட்டுமின்றி அர்ச்சனா கல்பாத்தி அந்நிறுவனத்தை கையிலெடுத்த பின்னர் அவர்களின் வெற்றி விகிதம் அதிகரித்துள்ளது. அடுத்ததாக ஏஜிஎஸ் லைன் அப்பில் மூன்று பிரம்மாண்ட படங்கள் உள்ளன. அதில் ஒரு படம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றொன்று சிம்பு நடிக்கும் காட் ஆஃப் லவ், இன்னொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதுவும் கன்பார்ம் ஹிட் அடிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டில் ராசியான தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஏஜிஎஸ்.