தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளைவிட பிற மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில் கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த ஏராளமான நடிகைகள் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருக்கிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் தான் கயாடு லோகர். இவர் தமிழில் இந்த ஆண்டு வெளியான டிராகன் என்கிற படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அவருக்கு தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
24
யார் இந்த கயாடு லோகர்?
நடிகை கயாடு லோகர் அசாமை சேர்ந்தவர். 24 வயதாகும் இவர் கடந்த 2021-ம் ஆண்டே முகில்பேட் என்கிற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். இதையடுத்து மலையாளம், மராத்தி மொழி படங்களிலும் நடித்த கயாடு லோகருக்கு அடையாளம் கொடுத்தது தமிழ் சினிமா தான். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக பல்லவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கயாடு லோகர். அப்படத்தில் அவரின் நடிப்பு மட்டுமின்றி அவரின் டான்ஸும் வேறலெவல் ஹிட் ஆனது. பிரதீப் உடனான சங்கீத் பார்ட்டியில் அவர் ஆடும் குத்தாட்டம் வைரல் ஹிட் ஆனது.
34
கயாடு லோகருக்கு குவியும் பட வாய்ப்பு
டிராகன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் நடிகை கயாடு லோகருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி வந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக அவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். ராம்குமார் இயக்கத்தில் சிம்பு, சந்தானம் நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் கயாடு. இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதுதவிர அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி, ஜிவி பிரகாஷுடன் இம்மார்டல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்து வருகிறார் கயாடு.
நடிகைகள் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருப்பது வழக்கம். அந்த வகையில் கயாடு லோகரும், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி அண்மையில் பீச் ஓரம் நீச்சல் உடையில் உற்சாக குளியல் போட்டபடி கயாடு லோகர் நடத்திய கிளாமரான போட்டோஷூட் செம வைரல் ஆகின. கிளாமரான வேடங்களில் நடிக்க ரெடி என்பதை சூசகமாக அறிவிக்கும் விதமாக அவர் இத்தகையை போட்டோஷூட் நடத்தி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அவரின் இந்த பீச் போட்டோஸுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.