தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் தனுஸ்ரீ தத்தா. அப்படத்திற்கு பின் இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்தியில் ஆஷிக் பனாயா ஆப்னே, ரிஸ்க், ஸ்பீடு, அபார்ட்மெண்ட் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் சினிமாவை விட்டு விலகிவிட்டார். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு மீடூ விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் தனுஸ்ரீ தத்தா. இந்நிலையில், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தன் வீட்டில் தான் டார்ச்சர் செய்யப்படுவதாக கூறி இருக்கிறார்.
25
தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு
அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது : “தனது வீட்டில் உள்ளவர்கள் வேலைக்காரர்களை வேண்டுமென்றே அறிமுகமில்லாத நபர்கள் நியமித்ததாகவும், பின்னர் அவர்கள் திருட்டு மற்றும் பிற சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறினார். இதனால், வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். விஷயங்கள் மேலும் மோசமடைவதற்கு முன்பு பொதுமக்களும், அதிகாரிகளும் தலையிட்டு தன்னை காப்பாற்ற வேண்டும் என்று தனுஸ்ரீ வலியுறுத்தினார்.
35
வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ
இந்த துன்புறுத்தலால் நான் சோர்வடைந்துவிட்டேன். இது 2018 metoo முதல் நடந்து வருகிறது. இன்று சோர்வடைந்து போலீஸை அழைத்தேன். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்! தாமதமாகும் முன் ஏதாவது செய்யுங்கள்." என்று கண்ணீர்மல்க அந்த வீடியோவில் பேசி உள்ளார் தனுஸ்ரீ தத்தா. அவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, நீங்கள் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிடுங்கள், அங்கு பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.
#MeToo இயக்கத்தின் போது குரல் கொடுத்த முதல் இந்திய நடிகைகளில் தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். 2009 ஆம் ஆண்டு வெளியான ஹார்ன் 'ஓகே' ப்ளீஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மூத்த நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சினிமா & தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கத்திடம் (CINTAA) புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
55
தனுஸ்ரீ தத்தா vs நானா படேகர்
மேலும், 2005 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் படத்தின் படப்பிடிப்பின் போது திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி தவறாக நடந்து கொண்டதாகவும், சக நடிகர் இர்ஃபான் கானுடன் சேர்ந்து "உடைகளைக் கழற்றி நடனமாட" அறிவுறுத்தியதாகவும் தத்தா குற்றம் சாட்டினார். அப்போது கான் மற்றும் சுனில் ஷெட்டி இருவரும் தனக்கு ஆதரவாக நின்றதாக அவர் கூறினார். நானா படேகர் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி இருவரும் தனுஸ்ரீ தத்தா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.