Dragon Box Office Collection : அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் முறியடித்து உள்ளது.
லவ் டுடே படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி அமைத்து நடித்த படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் விஜே சித்து, ஜார்ஜ் மரியான், மிஷ்கின், கெளதம் மேனன், ஹர்ஷத் கான், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
25
Dragon Movie Pradeep Ranganathan
டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அதை ஒட்டி ரிலீஸ் ஆனதால் அப்படத்தை பிப்ரவரி 21ந் தேதி தள்ளிவைத்தனர். அன்றைய தினம் நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்துக்கு போட்டியாக டிராகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இளைஞர்களை கவரும் விதமாக பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக டிராகன் உருவாகி இருந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ.8 கோடி வசூலித்து இருந்தது. பின்னர் இரண்டாம் நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் இரண்டு நாட்களில் ரூ.18 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருந்த நிலையில், மூன்றாம் நாளில் டிராகன் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
45
Dragon Day 3 Box Office
அதன்படி டிராகன் திரைப்படம் மூன்றாவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 10 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட வசூல் சாதனையை டிராகன் முறியடித்து உள்ளது. அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் மூன்றாம் நாளில் வெறும் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், டிராகன் படம் அதைவிட கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
55
Dragon Beat Vidaamuyarchi Collection
வார நாட்களிலும் டிராகன் படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படம் திங்கட்கிழமையான இன்று முன்பதிவு மூலம் மட்டும் ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதனால் வார நாட்களிலும் டிராகன் படம் வசூலில் தூள் கிளப்ப வாய்ப்பு உள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனையை முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.