Published : Sep 24, 2026, 08:42 PM ISTUpdated : Sep 24, 2026, 08:43 PM IST
Dorothy Movie Review : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனத், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் டோரதி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'டோரதி' படம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது. ட்ரெய்லரைப் பார்க்கும்போது இது ஒரு பக்கா ஆக்ஷன்-ரிவெஞ்ச் என்டர்டெய்னர் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான டைட்டில் டீசருக்கும் போஸ்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தில் சனத், ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் வேர்ல்ட் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. 'ரிவால்வர் ரீட்டா' படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் படம் என்பதால், அவருடைய ரசிகர்கள் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதேசமயம், சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய 'ரெட்ரோ' படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.
34
இளையராஜாவின் கம்பேக்
வித்தியாசமான கதை சொல்லும் ஸ்டைல் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த கார்த்திக் சுப்புராஜின் 10வது படம்தான் இந்த டோரதி. கார்த்திக் சுப்புராஜ் - இளையராஜா காம்போ முதன்முறையாக இணையும் படம் இதுதான். இது இளையராஜாவுக்கு ஒரு கம்பேக் படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. அப்பாடல்களுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில் டோரதி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் நண்பரும், நடிகருமான தனுஷ் தான் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில் ‘கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ ஒரு அற்புதமான படைப்பு. தைரியமான மற்றும் ஆழமான கதைக்களத்துடன், மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாகவும் படம் உருவாகியுள்ளது. படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது; சிம்பிளாக இது இளையராஜாவின் ருத்ரதாண்டவம் என பாராட்டி உள்ளார்.
நண்பர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ‘டோரதி’ படக்குழுவினருக்கு படத்தின் வெளியீட்டையொட்டி மனமார்ந்த வாழ்த்துகள். கடவுள் அருள் எப்போதும் துணை நிற்கட்டும் என தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அநேகமாக தனுஷின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Dorothy - a masterpiece from @karthiksubbaraj Bold and poignant. Raw and intense. Every actor has performed brilliantly. Our maestro ilayaraja sir’s background score will blow your mind away. Rudhrathandavam from isaignani. Best wishes to my dear friend Karthick subbaraj and…
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.