உண்மையில் அஜித் மற்றும் விஜயிடம், ரஜினி தோற்றுத்தான் போனாரா? ஜெயிலர் ஆடியோ லான்ச் தான் காரணமா?

First Published Aug 28, 2023, 1:56 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி இன்றளவும் நல்ல முறையில் ஓடி வருகிறது. ஆனால் விஜய் மற்றும் அஜித் திரைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, உண்மையில் அதிக அளவிலான வசூலை ஜெயிலர் படம் பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Jailer Director Nelson Dilipkumar

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலக அளவில் 525 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடி வருகிறது ஜெயிலர் திரைப்படம். இதற்கு முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் சில சறுக்கல்களை சந்தித்த நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமார் ஒரு இயக்குனராக கம் பேக் கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

நடிகை ரோஜாவின் கணவர்.... இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் - சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

Jailer rajinikanth movie Poster

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியிலும், நெல்சன் திலீப் குமாரின் ரசிகர்கள் மத்தியிலும், இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தினுடைய முதுகெலும்பாக அனிரூத் இசை திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய திரை உலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சுமார் 18 நாட்களை கடந்து படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.


Rajinikanth and Thalapathy Vijay

ஆனால் இந்த படத்தின் தமிழகத்தினுடைய முதல் நாள் வசூல் வெறும் 25 கோடி ரூபாய் தான் என்று கூறப்படும் நிலையில், அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தோற்றுப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் தமிழகத்தில் முதல் நாள் வசூலாக விஜய் மற்றும் அஜித் படங்கள் 35 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய சில விஷயங்கள், தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் சொன்ன அந்த காகம் கழுகு கதையில், அவர் தளபதி விஜய் அவர்களைத் தான் காகம் என்று குறிப்பிட்டு பேசியதாக பல சர்ச்சைகள் வெடித்தது.

Rajinikanth and Thala Ajith Kumar

இந்நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் பல கோடி ரூபாய்களை வசூல் செய்து இருந்தாலும் தமிழக அளவில் முதல் நாள் வசூலில் விஜய் மற்றும் அஜித் திரைப்படங்களைப் போல வசூல் செய்யவில்லை என்று தான் கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் அவருடைய படம் குறித்த ஒரு அச்சமும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும், 73 வயது நடிகர் ஒருவர், தன்னை பார்த்து சினிமா ஆசை கொண்டு வளர்ந்து வந்த நடிகர்களோடு போட்டி போட்டு தனது படங்களை வெளியிடுவது உலக சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயிலர் பட வசூல் சாதனை எல்லாம் சல்லி சல்லியா நொறுங்கப்போகுது... ஆத்தாடி செப்டம்பரில் இத்தனை படங்கள் ரிலீஸா?

click me!