Malaika Arora
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். கடந்த சில ஆண்டுகளாக இவர் தமிழிலும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் தயாரிப்பில் வெளிவந்த 4 படங்களில் 3 படங்கள் அஜித் உடையது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள் இவர் தயாரித்தது தான். இவருக்கு அர்ஜுன் கபூர் என்கிற மகன் உள்ளார். இவரும் பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Arjun Malaika
அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா ஜோடி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகியது. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமலே ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.