சமந்தா பற்றி வாயிக்கு வந்ததை பேசி விட்டு... அந்தர் பல்டி அடித்த மருத்துவர்..! என்ன சொன்னார் தெரியுமா?

First Published | Oct 25, 2021, 9:16 PM IST

நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்த, 3  யூடியூப் சேனல் மீது சமந்தா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது சமந்தாவுக்கு எதிராக பேசிய மருத்துவர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பொறாமை படும்படி வாழ்ந்து வந்த பிரபல நடிகை சமந்தா திடீர் என கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக கூறியது தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்து குறித்தும், என்ன பிரச்சனை காரணமாக பிரிகிறோம் என்பது குறித்தும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது.

Tap to resize

சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீதமுடன் காட்டிய நெருக்கம் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில வதந்திகள் தீயாக பரவியது. பின்னர் ப்ரீத்தம் சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே போல் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் கொடுத்த போதும், சில யூடியூப் சேனல்கள் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதங்களை நடத்தின. 'சமந்தா தவறு செய்கிறார்' .. 'சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்' .. என்பது போன்ற விவாதங்களை முன் வைத்தனர்.

சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர்.

அந்த வகையில் மருத்துவர் வெங்கட் ராவ், சமந்தாவிற்கு சிலருடன் தொடர்பு இருந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இன்றி கூறினார். இது சமந்தாவின் கோபத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். சமந்தா தன்னுடைய பேத்தி போன்றவர் என்றும், அவருக்கு எதிராக பேசியது சமூக வலைத்தளத்தில் பரவிய தகவலை வைத்தே பேசியதாக கூறியுள்ளார். இப்படி மாத்தி மாத்தி பேசுறாரே... என பலர் சமூக வலைத்தளத்தில் குமுறி வருகிறார்கள்.

Latest Videos

click me!