‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு so baby பாடல் வெளியாகி லட்சக்கணிக்கில் வியூஸ்களை குவித்து வருகிறது. இதையடுத்து படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது டாக்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இதுதொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், “டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். படம் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதல் நாளில் இருந்து நீங்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும். உங்களுடைய காத்திருப்புக்கு டாக்டர் படம் நிச்சயம் விருந்தாக இருக்கும்” என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது, 'டாக்டர்' பட புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் கூறியுள்ளதாவது, "டாக்டர் மீது பேரன்பு பொழிபவர்களுக்காக, புதிய வெளியீட்டு தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம். டாக்டர். வருண் மற்றும் குழுவினரை திரையரங்குகளில் ரமலான் பண்டிகை அன்றிலிருந்து சந்திக்கலாம். இந்த சமயத்தை, எங்களது 'டாக்டரை' மெருகேற்ற பயன்படுத்த உள்ளோம். நீங்கள் தவறாமல் மறக்காமல் வாக்களிக்கவும். நினைவிருக்கட்டும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. திரையரங்குகளில் சந்திக்கலாம். என்று தற்போது அறிக்கை ஒன்றை டாக்டர் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இதில் இருந்து, தேர்தல் காரணமாக தள்ளி போன, 'டாக்டர்' திரைப்படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.