நடிகைகள் பற்றி அருவருக்கத்தக்க பேச்சு.. லெப்ட் ரைட் வாங்கிய ரோகினி - சரண்டரான பிரபலம் வெளியிட்ட பதிவு!

First Published | Sep 19, 2024, 6:58 PM IST

Kollywood Actresses : நடிகைகளின் நடத்தை குறித்த காந்தாராஜின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு, பிரபல நடிகை ரோகினி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Doctor Kantharaj

டாக்டர் காந்தாராஜ்

பிரபல டாக்டர் காந்தாராஜ், கமலின் "தசாவதாரம்" உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பொதுவாக அரசியல் ரீதியாக பல சர்ச்சையான கருத்துக்களை பேசும் இவர், கடந்த செப்டம்பர் 7ம் ஒரு தனியார் YouTube சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த நேர்காணல் தான் அவருக்கு இப்பொது மிகப்பெரிய எதிரியாக மாறியுள்ளது. "நாடிகள் அனைவரும் பாலியல் தொழிலாளர்கள் தான், இது இயல்பான ஒன்று தான்" என்று நடிகைகள் பலர் குறித்து மிகவும் ஆபாசமான முறையில், அனைவரும் முகம்சுளிக்கும் வகையில் பேசியது பலரது கண்டனத்துக்கு உள்ளது. 

நடிகைகள் அனைவரையும் கொச்சையாக பேசிய டாக்டர் காந்தாராஜ் மீது உடனே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்திட வேண்டும் என்றும் பலர் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகின்றது.

'இட்லி கடை' கன்ஃபாம் செய்த தனுஷ்..!

Actress Rohini

நடிகை ரோகினி 

தொடர்ச்சியாக இப்படி நடிகைகள் மீது ஆதாரமற்ற மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தமிழ் நடிகை ரோகினி தனது கருத்தினை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், டாக்டர் காந்தாராஜ் மீது ரோகினி புகார் அளித்த நிலையில் விஷயம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. உயரிய பொறுப்பில், அதுவும் ஒரு மருத்துவர் இப்படி பேசுவது கேவலமான ஒரு விஷயம் என்று சாடிய நடிகை ரோகினி, உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

இந்த நிலையில் தான் டாக்டர் காந்தாராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் அவர் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று டாக்டர் காந்தாராஜ் இந்த சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Latest Videos


Doctor Kantharaj

மன்னிப்பு கேட்ட டாக்டர் 

"நடிகைகள் குறித்து வேண்டுமென்றே நான் அப்படி பேசவில்லை, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நான் அளித்த அந்த பேட்டியில் நான் நடிகைகள் குறித்து பேசியது தவறு தான். யாருடைய மனமும் புண்பட வேண்டும் என்று நான் அவ்வாறு பேசவில்லை. இருப்பினும் எனது கருத்துக்காக நான் வருத்தப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், அவர் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. 

இந்த விவகாரத்தில் துணித்து செயல்பட்ட நடிகை ரோகிணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nadigar Sangam

நடிகர் சங்கம் 

அண்மையில் கேரள திரையுலகில் 20க்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பல கேரள நடிகைகள் பாலியல் புகார் அளித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. நீதிபதி ஹேமா அமைத்த கமிட்டி அளித்த தகவல்களும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விஷயம் கோலிவுட் உலகிலும் பெரிய புயலாக உருவெடுத்தது. 

இதனையடுத்து தமிழக நடிகர் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் "நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்களின் குற்றம் நிரூபணமானால், அவர்கள் 5 ஆண்டுகள் வரை நடிக்க தடை விதிக்கப்படும். மேலும் பொதுவெளியில் மற்றும் YouTube சேனல் மூலம் நடிகைகள் குறித்து ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுபவர்கள் மீது, நடிகைகள் புகார் அளிக்க, நடிகர் சங்கம் வேண்டிய உதவிகளை செய்யும்" என்று அறிவித்திருந்தது.

click me!