தமிழில் உருவாகிறது சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு... ஹீரோயின் யார் தெரியுமா?

First Published | Dec 8, 2020, 6:46 PM IST

சில்க் ஸ்மிதா போலவே வசீகர கண்கள், ஈர இதழ்களையும் கொண்ட பெண்ணை வலை வீசி தேடி வந்தனர். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கிடைத்துவிட்டாராம். 
 

பட்டு போன்ற உடலுக்கு சொந்தக்காரி என்பதால் சில்க் ஸ்மிதா என பெயர் வந்ததாக பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். வினுசக்ரவர்த்தி அறிமுகப்படுத்திய முதல் படத்தில் சிலுக்கு என்ற பெயரில் நடித்தார்.
அன்றிலிருந்து அது அவருடைய பட்டப்பெயராக மாறியது. கவர்ச்சி நடிகையாக மட்டும் இல்லாமல் ஒருசில படங்களில் தனது நடிப்பு திறமையாலும் மிரட்டியவர் சில்க் ஸ்மிதா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் அடியெடுத்து வைத்து 4 ஆண்டுகளிலேயே சில்க் ஸ்மிதா 200 படங்களில் நடித்திருந்தார்.
உச்ச நட்சத்திரமானாலும் சில்க் ஸ்மிதா கால்ஷீட் கேட்டு காத்திருந்த காலங்களும் உண்டு. அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
கணக்கிடலங்காத திருப்பங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அவள் அப்படித்தான் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளனர்.
காயத்ரி பிலிஸ், முரளி சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குநர் மணிகண்டன் இயக்க உள்ளார்.
சில்க் ஸ்மிதா போலவே வசீகர கண்கள், ஈர இதழ்களையும் கொண்ட பெண்ணை வலை வீசி தேடி வந்தனர். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கிடைத்துவிட்டாராம்.
தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ், சில்க் சுமிதாவின் தோற்றம்” என்று தன் படத்தை வெளியிட்டுள்ளார்.

Latest Videos

click me!