Mamitha Baiju Salary: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் 'டியூட்' திரைப்படத்திற்கு மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இளவட்ட ரசிகர்களை கவரும் விதத்தில், திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், அக்டோபர் 22-ஆம் தேதி ரிலீஸ் ஆன 'டியூட்' திரைப்படத்திற்கும், மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார்.
24
பாலா இயக்கத்தில் நடித்த மமிதா:
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர் ஏற்கனவே இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடித்து... சில தினங்களிலேயே கைவிடப்பட்ட 'வணங்கான்' படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறிய பின்னர், மமிதா பைஜூவும் வெளியேறுவதாக அறிவித்தார்.
34
குவியும் வாய்ப்புகள்:
ஆனால் இவர் மலையாளத்தில் நடித்த 'பிரேமலு' திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் இவர் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், கடந்த வாரம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவர் நடித்த டியூட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் மூலம் மமிதா தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது வரை 'டியூட்' திரைப்படம் ரூ.95 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
44
மமிதாவின் சம்பளம்:
ரூ. 100 கோடி வசூலை இப்படம் நெருங்கி வரும் நிலையில் தான் கதாநாயகி, மமிதா பைஜூ சம்பளம் பற்றிய ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவ துவங்கியது. அதாவது, தன்னுடைய முதல் படத்திற்கு மமிதா ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை மமிதா தரப்பில் மறுத்துள்ளனர். அதே போல் மமிதா இந்த படத்தில் நடிக்க ரூ. 40 முதல் 60 லட்சம் வரை தான் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.15 கோடி எல்லாம் மிகப்பெரிய உருட்டு என்பது தெளிவாகி உள்ளது.