இவர் தன்னுடைய சகோதரர் இயக்கத்தில் நடித்த 'துள்ளுவதோ இளமை' படத்தில், கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தாலும், மற்ற மற்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்வாரா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருந்தது.
இந்த கேள்விக்கு பதிலை தன்னுடைய இரண்டாவது படத்திலேயே கொடுத்தார் தனுஷ். 'காதல் கொண்டேன்' படத்தில் இவரது நடிப்பை பார்த்த சினிமா விமர்சகர்கள் பலரும், தனுஷ் வருங்காலத்தில் நடிப்பு ராட்சசனாக உருவெடுப்பார் என பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர்.
அன்று இளம் வயதில் துவங்கிய இவரது திரை பயணத்தில்... தான் தேர்வு செய்து நடிக்கும் ஓவ்வொரு படங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இதற்க்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம்.... ரசிகர்களின் அன்பும், தேசிய விருதும் என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்து, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களையும் கவர்த்துள்ள தனுஷின் பெற்றோர் இவர் நடித்ததில் மிகவும் பிடித்த படம் எது என்பது குறித்து, பிரபல ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் பகிர்துகொண்டுள்ளனர்.
அப்போது தனுஷின் தாயார்... அவர் நடிக்கு படங்களில், குறிப்பாக காதல் கொண்டேன், மரியான், அசுரன் போன்ற படங்களின் சில காட்சிகள் டிவியில் போட்டால் கூட பார்க்க மாட்டேன். அது படம் தான் என தெரிந்தாலும் தன்னை மீறி அழுகை வந்துவிடும் என உணர்ச்சிவசமாக தாய் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இதுவரை அவர் நடித்ததில் தன்னை மிகவும் கவர்ந்தது என்றால் அது 'காதல் கொண்டேன்' படம் தான். என்னால் நடிக்க முடியாது போய் விடுகிறேன் என்கிற மனநிலையில் இருந்த போது இப்படி ஒரு நடிப்பை அவர் வெளிப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
அதே போல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தன்னுடைய மகன் நடித்த 'மயக்கம் என்ன' படம் தான் மிகவும் பிடித்தது என்றும், அதில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.