“சூரரைப் போற்று” படத்தில் பெண் பைலட்டாக நடித்த இவர் யார் தெரியுமா?... ஷாக்கிங் உண்மை...!

First Published | Nov 19, 2020, 7:52 PM IST

அந்த காட்சியில் பெண் பைலட்டாக தோன்றியவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாக தேடி வந்தனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது. தீபாவளி விருந்தாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனர் நிறுவிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இதில், சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவே இல்லை... வாழ்த்திருக்கிறார். கண்டிப்பாக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலவி வருகிறது.
Tap to resize

சூரரைப் போற்று படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் சீனும், பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பிச்சையெடுக்காத குறையாக பயணிகளிடம் பணம் கேட்கும் போதும் கண்கலங்க வைக்கிறார்.
அப்படித்தான் படத்தின் இறுதிக்காட்சியில் பெண் பைலட் ஒருவர் விமானத்தை இயக்கியது போல் காட்டப்பட்டிருக்கும், அந்த பெண் பைலட்டை பார்த்து ஊர்வசி சூர்யாவிடம் “எப்பா... இந்த பிள்ளையா இந்த பிளைட்டை ஓட்டுச்சு” என கேட்பார்.
அந்த காட்சியில் பெண் பைலட்டாக தோன்றியவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாக தேடி வந்தனர். அவருடைய பெயர் வர்ஷா நாயர்.
திரையில் கெத்தாக பைலட் உடையில் நடந்து சென்ற வர்ஷா நிஜத்திலும் ஒரு பெண் பைலட்டாக இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வருகிறார்.
இயக்குநர் சுதா கொங்கரா அழைப்பின் பேரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Latest Videos

click me!