Published : Mar 18, 2025, 07:08 PM ISTUpdated : Mar 18, 2025, 09:28 PM IST
ஏ ஆர் ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ என்ற பாடல் முதலில் உருவாக்கப்பட்டது பிரபல பாலிவுட் நடிகர் சல்மானுக்காக தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எதனால் அவர் இந்த பாடலை நிராகரித்தார் என்பதை பார்ப்போம்.
ஏ ஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்றால், அந்த படம் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் அதிக அளவில் கவனிக்கப்படும். அப்படி ஏராளமான ஹிட் கொடுத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வந்த ரோஜா படம் மூலமாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ஏ ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தனது திறமையான இசையை நிரூபித்து தேசிய விருது இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் இசையில் அடுத்தடுத்து வெளியான, படங்களின் இசை மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
24
முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
1992 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலிஸ் ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். மேலும், ஏராளமான படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக் சினிமாவில் இசையமைப்பாளர் என்பதை தாண்டி, பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தனி முத்திரை பதித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று கொடுத்த ஜெய்ஹோ பாடல்
2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஸ்லம்டாக் மில்லினியர் (Slumdog Millionaire) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி பாடகருக்கான ஆஸ்கார் விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது. ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வென்ற கொடுத்தது Slumdog Millionaire படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடல் தான்.
44
ஆஸ்கர் விருது பாடலை நிராகரித்த சல்மான் கான்:
ஆனால் இந்த பாடல், முதல் முதலில் அவர் வேறொரு நடிகருக்கு தான் உருவாக்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் சல்மான் கானின் Yuvvraaj படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் தான் அது. அந்தப் பாடல் வேண்டாம் என்று சல்மான் கான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் மறுத்த அந்த ஜெய் ஹோ பாடலைத் தான் இங்கிலாந்து இயக்குநர் டேனி பாய்லே இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான Slumdog Millionaire படத்தில் பயன்படுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடல் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு, வெளிநாட்டு படங்களின் ஒரிஜினல் பாடல் பிரிவில் 2 ஆஸ்கர் விருதுகளை அவருக்கு வென்று கொடுத்துள்ளது.