ஒட்டுமொத்த திரையுலகமே கண் வைக்கும் அளவிற்கு காதலித்து வருகிறார்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும்.
'நானும் ரவுடிதான்" படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது. கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு முதல் ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் எங்குமே நகர்வது கிடையாது. காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி அந்த போட்டோக்களை வேறு அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார்.
இதுவரை காதல் பறவைகளாக வலம் வந்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் லாக்டவுன் நேரத்தில் சிம்பிளாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்த சுவாரஸ்ய தகவல் கசிந்துள்ளது.
அந்த பேட்டியில் ரகுமான் நீங்கள் 1894ல் பிறந்தவரா? என கேட்பார் அதற்கு விக்கி, இல்லை 1985 என பதிலளிப்பார். அதாவது விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும்.
நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவோ 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பிறந்தவர். இதன் மூலம் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா 10 மாதங்கள் மூத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
காதலுக்கு வயது ஒரு தடையில்லை தானே..