நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் மிகவும் கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் கூட, துணிந்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர்.
பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆண்ட்ரியா.
இவரின் அறிமுகமான 'பச்சை கிளி முத்துசரம்' திரைப்படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால் ஆண்ட்ரியா, தான் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் கவர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையில் தான் நடிக்க வேண்டும் என, தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட தளபதி விஜய், ஆண்ட்ரியா நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஹீரோயின் என்கிற வலையில் சிக்காமல், தொடர்ந்து அழுத்தமான குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான வடசென்னை படம், இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
விரைவில் இவர் விஜய்யுடன் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடிக்கடி, ஏகப்பட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் யாரும் சற்றும் எதிர்பார்த்திடாத, புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். சிறிய வயதில் இவர் கேட்வாக் சென்ற போது இது எடுத்த புகைப்படம் என கூறியுள்ளார்.