இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 16, 2025, 03:18 PM IST

Do you know Keerthy Suresh First Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா?

PREV
16
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக மாறிய கீர்த்தி சுரேஷ் தற்போது, பன்மொழி படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷின், தந்தை ஒரு மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதாலும், அவரின் அம்மா ஒரு நடிகை என்பதாலும், சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் வந்துவிட்டது. மேலும் தந்தை தயாரில் உருவான சில மலையாள படங்களான 'பைலட்ஸ்', 'அச்சநேயனிக்கிஷ்டம்', மற்றும் 'குபேரன்' போன்ற படங்களில் சைல்ட் ஆர்டிஸ்டாக நடித்து அசத்தினார்.

26
படிப்பை முடித்த கையேடு நடிப்பு:

படிப்பை முடித்த பின்னரே ஹீரோயினாக அறிமுகமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கீர்த்தி, சென்னையில் உள்ள பேர்ல் அகாடமியில் தான் ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய மலையாளத் திரைப்படமான 'கீதாஞ்சலி' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, எதார்த்தமான நடிப்பாலும், அழகாலும் மலையாள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

36
தமிழில் அறிமுகம்:

கீர்த்தி சுரேஷை, தமிழில்2015 ஆம் ஆண்டு 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஏ.எல்.விஜய். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

46
தேசிய விருது:

அதே போல் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். விஜய், மகேஷ் பாபு, தனுஷ், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்த சுரேஷ் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி, தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை என்கிற தன்னுடைய நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

56
அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள்:

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி ஆகிய படங்கள் ரிலீசுக்காக கார்த்திருக்கிறது. அதே போல், தெலுங்கில் யெல்லம்மா, ரவுடி ஜனார்தன், தோட்டம், ஆகி படங்கள் உருவாகி உள்ளன. அக்கா என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும், மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துளளார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இது ஒரு கோர்ட் டிராமா படமாக உருவாகி உள்ளது.

66
கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம்:

இன்று தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு 4 முதல் 5 கோடிவரை சம்பளமாக வாங்கும் கீர்த்தி சுரேஷ், வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... வெறும் 500 ரூபாய் தான். அதாவது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஃபேஷன் ஷோவின் திரைக்குப் பின்னால் உதவியாளராகப் பணிபுரிந்ததற்காக அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாம். அந்தப் பணத்தை அவர் தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். சிறு வயதில் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தின் தயாரிப்பாளர் தந்தை என்பதால்... அதற்கான சம்பளம் என அவர் எதுவும் கொடுத்தது இல்லையாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories