காசு கொடுத்தா பிகினி போட்டோ... இன்ஸ்டாவில் கல்லாகட்டும் தர்ஷா குப்தா..! ஒரு மாதத்துக்கு இத்தனை லட்சமா?

Published : Sep 24, 2025, 11:40 AM IST

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் தன்னுடைய பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

PREV
19
Dharsha Gupta Instagram Earnings

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் தர்ஷா குப்தா, இவர் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு மாடலிங்கிலும் ஆர்வம் இருந்ததால், டீச்சர் வேலையை உதறித் தள்ளிவிட்டு, சின்னத்திரையில் நடிக்க முயற்சித்து வந்தார்.

29
சின்னத்திரை அறிமுகம்

இதையடுத்து தர்ஷா குப்தாவுக்கு முல்லும் மலரும் என்கிற சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார் தர்ஷா குப்தா. இந்த சீரியல் தான் தர்ஷா குப்தா நடித்த முதல் சீரியல்.

39
லாக்டவுன் போட்டோஷூட்

முல்லும் மலரும் சீரியல் முடிந்த பின்னர் கொரானா லாக்டவுன் போடப்பட்டது. அந்த சமயத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் வீட்டில் இருந்தே விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். குறிப்பாக இளசுகளை கவர் சற்று கிளாமர் தூக்கலாக போட்டோ வெளியிட்டு பாப்புலர் ஆனார் தர்ஷா.

49
விஜய் டிவி வாய்ப்பு

போட்டோஷூட் நடத்தியதன் பயனாக அவருக்கு விஜய் டிவியில் செந்தூரப் பூவே என்கிற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் களமிறக்கப்பட்டார். அந்த சீசனில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார் தர்ஷா.

59
சினிமாவில் அறிமுகம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த கையோடு தர்ஷா குப்தாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா. இதையடுத்து சன்னி லியோன் உடன் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார்.

69
பிக் பாஸில் தர்ஷா

சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகளை தட்டிதூக்குவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் தர்ஷா. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆகலாம் என்கிற கனவோடு இருந்த தர்ஷாவுக்கு, அந்நிகழ்ச்சி மூலம் ஒரு பயனும் கிடைக்கவில்லை. ஒரே மாதத்தில் அந்நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார் தர்ஷா.

79
புது ரூட்டில் தர்ஷா

சினிமா மற்றும் சின்னத்திரையில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் இன்ஸ்டாகிராமில் தனக்கு இருக்கும் 22 லட்சம் பாலோவர்களை நம்பி புது ரூட்டில் களமிறங்கி இருக்கிறார் தர்ஷா. அதில் தன்னுடைய பக்கத்தில் காசு கட்டி சப்ஸ்கிரிப்ஷன் பெற்றால் தனது கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார் தர்ஷா.

89
பிகினிக்கு காசு

இன்ஸ்டாவில் வழக்கமாக போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடும் தர்ஷாவிடம், பிகினி போட்டோஸ் வெளியிடுமாறு கேட்கும் ரசிகர்களிடம், அது என்னுடைய சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டும் தான், வேண்டுமென்றால் நீங்களும் சப்ஸ்கிரைப் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என ஓப்பனாக சொல்கிறார்.

99
ஒரு மாதத்துக்கு இத்தனை லட்சமா?

இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தாவின் பக்கத்திற்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற ஒரு மாதத்திற்கு 440 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதுவரை 1821 பேர் காசு கட்டி சப்ஸ்கிரிப்ஷன் செய்துள்ளனர். இதன் வாயிலாக மாத மாதம் தர்ஷாவுக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் வருமானம் வருகிறது. தன்னுடைய சப்ஸ்கிரைபர்களை குஷிப்படுத்த தனது பிகினி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றி பரவசப்படுத்தி வருகிறார் தர்ஷா.

Read more Photos on
click me!

Recommended Stories