பாடும் நிலாவாய் மட்டுமல்ல... நட்சத்திர வானிலும் ஜொலித்த எஸ்.பி.பி... நடிகராய் மிரட்டிய படங்கள் இதோ...!

First Published Sep 25, 2020, 7:43 PM IST

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.பி. நடிகராகவும் பல படங்களில் கலக்கியுள்ளார். அவருடைய நடிப்பிற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா? என போட்டி, போட்டி நடித்த படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்... 

பெல்லெண்டே நூரல்லா பண்டா என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் எஸ்.பி.பி. அதன் பின்னர் 1971ம் ஆண்டு முகமது பின் துக்ளக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
undefined
1987ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “மனதில் உறுதி வேண்டும்” படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்த எஸ்.பி.பி-யை யாராலும் மறக்க முடியாது.
undefined
சந்தான பாரதி இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான “குணா” படத்தில் ராமைய்யா என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
undefined
1990ம் ஆண்டு வெளியான “கேளடி கண்மணி” படத்தில் ராதிகாவுடன் நடித்து அசத்தினார். இந்த படத்தில் எஸ்.பி.பி மூச்சுவிடாமல் பாடிய "மண்ணில் இந்த காதல்" பாடல் இப்போது வரை ரசிகர்களின் டாப் லிஸ்டில் இருக்கிறது.
undefined
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா, ரகுவரன், கிரிஷ் கர்நாட், வடிவேலு நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் “காதலன்”. இந்த படத்தில், நாயகன் பிரபுதேவாவின் பாசமான தந்தை கதிரேசனாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்து இருப்பார்.
undefined
ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி , நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த “மின்சார கனவு” படத்தில், அரவிந்த்சாமியின் தந்தையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
undefined
“ப்ரியமானவளே” படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக இல்லாமல், நண்பன் அளவிற்கு நடித்த எஸ்.பி.பியை யாராவது மறந்திருக்க முடியுமா?. இப்படி ஒரு அப்பா நமக்கில்லையே என இளைஞர்கள் ஏங்கும் அளவிற்கு நடித்திருந்தார்.
undefined
மணிரத்னம் இயக்கிய “திருடா திருடா” படத்தில் லட்சுமி நாராயணன் என்ற சிபிஐ அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார்.
undefined
“ரட்சகன்” படத்தில் கோபக்கார நாகர்ஜுனாவின் அப்பா, “அவ்வை சண்முகி” படத்தில் அசத்தல் டாக்டர். “உல்லாசம்” படத்தில் அஜித் குமாருக்கு அப்பா, “காதல் தேசம்” படத்தில் தபுவிற்கு தந்தை என அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை மறந்தாலும் இவருடைய கேரக்டரை மறக்க முடியாத அளவிற்கு அழுத்தமான முத்திரை பதித்தவர்.
undefined
click me!