இந்தப்பதிவை பார்த்து பதறிப்போன சூரி தனது எக்ஸ் பக்கத்தில் தான் பேசியதாக பரவிய பொய் செய்தித் துணுக்கை பகிர்ந்து, "தம்பி, தவறான தகவலை பரப்புவது எப்போதும் சமூகத்திற்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களை பெற தகுதியானது. அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள். எனக்கும் பல வேலைகள் உள்ளன. உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செலுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இந்த தீபாவளியை நடிகர் சூரி தனது உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதற்கு பல ரசிகர்கள் இணையவாசிகள் லைக்குகளை அள்ளி வீசினர். வெகு சிலர் இந்த கொண்டாட்டம் நன்றாக இருப்பதாக எல்லாம் கமெண்ட் தெரிவித்தார்கள். அதில் ஒரு இணையவாசி, ‘‘திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று மோசமாக கமெண்ட் போட்டார். அதற்கு சூரி தனது ஸ்டைலில், “ திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்... அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என்று பதிவிட்டிருந்தார்.