Sharwanand Divorce: நடிகர் சர்வானந்த் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக ரசிகர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். தமிழில் 'காதல்னா சும்மா இல்ல' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக இவர் அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய வைத்தது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, அனன்யா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் தான். உண்மை கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், சர்வானந்த் அனன்யாவுக்கு ஜோடியாக, நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, கணம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழில் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும்... தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான நடிகராவே உள்ளார். அதே நேரம் தெலுங்கில், எதார்த்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சர்வானந்த், பிரபல நடிகர் ராம் சரணின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
இந்த நிலையில் தான், சர்வானந்த் தன்னுடைய மனைவி ரட்சிதாவிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக புதிய தகவல் ஒன்று காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. நடிகர் சர்வானதுக்கு 2022-ஆம் ஆண்டு ரட்சிதா என்கிற அவருடைய காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், 2023-ல் இவர்களின் திருமணம் நடந்து நடந்தது. தற்போது இந்த ஜோடிகளுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
45
ரட்சிதாவுடன் கருத்து வேறுபாடு:
கடந்த சில மாதமாகவே சர்வானந்த் மற்றும் ரட்சிதா திருமண உறவில் விரிசல் விழுந்துள்ளதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து முடிவை நோக்கி இவர்களின் எண்ணம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
55
மறுக்கும் உறவினர்:
ஆனால் இந்த தகவலை சர்வானந்த் உறவினர் ஒருவர் மறுத்துள்ளார். சர்வானந்த் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் இருப்பதால் அவரின் மனைவி தனியாக இருக்கிறாரே தவிர, இவர்கள் இருவருக்கும் பிரியும் எண்ணம் என்பது துளியும் இல்லை என கூறியுள்ளாராம். எனினும் நெருப்பில்லாமல் புகையாது என கமெண்ட் போட்டு வரும் ரசிகர்கள்... பல பிரபலங்கள் விவாகரத்து செய்து வெளியாகும் போது அப்படி எதுவும் இல்லை என கூறி அந்த தகவலை மறுத்துவிட்டு நீதிமன்றத்தை அணுகும் போது தான் உண்மையை உடைக்கிறார்கள். அதே போல் சர்வானந்த் விஷயத்திலும் நடக்குமா என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இதுவரை இந்த வதந்திக்கு சர்வானந்த் வாய் திறக்காத நிலையில்... கூடிய விரைவில் பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.