
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்ததிலிருந்து, ஒவ்வொரு வாரமும் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள், போட்டி உணர்வுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்... கடந்த வார எலிமினேஷனில் வீட்டினராலும், ரசிகர்களாலும் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என அழைக்கப்பட்ட திவாகர் வெளியேறினார்.
இவருடைய வெளியேற்றம் ஒரு தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. காரணம் கன்டென்ட் கொடுக்காமல் உள்ளே இருக்கும் சில போட்டியாளர்களுடன் இவரை ஒப்பிட்டு பலர் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்து வந்தனர். நிகழ்ச்சி முடிந்த உடனேயே, திவாகர் விஜய் டிவி தொலைக்காட்சிக்கு முதன்முறையாக அளித்த பேட்டி ஒன்றை கௌடத்துல்ல நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது இது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
திவாகரை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஜாக்குலின், தான் பேட்டி கண்டுள்ளார். பேட்டி தொடங்கியபோது, “ரசிகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளையே நேரடியாக கேட்கப் போகிறேன்” என அறிவித்த ஜாக்குலின், நீங்கள் வீட்டுக்குள் சென்ற நோக்கம் நிறைவேறியதா என கேட்டார்? "இதற்கு பதிலளித்த திவாகர், “நான் இங்கு வந்ததன் ஒரே நோக்கம் எனது நடிப்பு திறமையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அந்த நோக்கம் நிச்சம் நிறைவேறியுள்ளது. 42 நாட்கள் தொடர்ச்சியாக கேமரா முன்னால் என் இயல்பையும் திறமையையும் காட்ட வேண்டியிருந்தது. இதை ஒரு பெரிய வாய்ப்பாகவும், ஒரு சவாலாகவும் பார்த்தேன்,” என்று பதிலளித்தார்.
எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தீர்கள் என ஜாக்குலின் கேட்டபோது, “நான் 60 நாட்கள் இருக்கமுடியும் என்று நினைத்தேன். மனதளவிலும் உடலளவிலும் தயாராக இருந்தேன். ஆனால் அதற்க்கு முன்பாகவே வெளியேறிவிட்டேன் என கூறினார். பின்னர் திவாகரன் வெளியேறியதற்கான காரணம் குறித்து ஜாக்குலின் கேள்வி எழுப்ப, “நான் டாஸ்க்களில், கேம்களில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் அந்த பங்குதான் முக்கியம். அதில் நான் பின்தங்கியது தான் வெளியேறுவதற்கான முக்கிய காரணம்,” என்று நினைப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசும் போது, "நீங்கள் சண்டை போடும் நேரங்களில் ‘தகுதி’, ‘தராதரம்’ போன்ற வார்த்தைகளைப் அடிக்கடி ஏன் பயன்படுத்தினீர்கள் என்பது குறித்து கேட்கப்பட்டபோது, “ சில நேரங்களில் சிலர் பேசும் விதம் அவமதிப்பாக இருந்தது. அந்த கோபத்தின் காரணமாக வார்த்தைகள் தானாக வந்துவிட்டது. அதை நான் ஏற்கிறேன்,” என்று திவாகர் விளக்கமளித்தார்.
டைட்டில் வின்னர் யார் என்பதைப் பற்றி கேட்டபோது, “இந்த சீசன் இன்னும் சரியாக சூடேறவில்லை. யாரேனும் ஒருவரை டைட்டில் வின்னர் என்று இப்போதே சொல்லக்கூடிய வகையில் யாருமே தங்களின் விளையாட்டை வெளிக்காட்டவில்லை காட்டவில்லை. அனைவரும் சராசரி மட்டத்தில் ஆடுகிறார்கள். அடுத்த வாரங்களில் இந்த முடிவுகள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் என்கிறார். அடுத்த எலிமினேஷனில் யார் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு, “ரம்யா, அரோரா, சுபிக்ஷா ஆகிய 3 பேரின் பெயரை கூறினார்.
அதே போல் விஜே பார்வதி சில நேரங்களில் கட்டுப்பாடு இழந்து பேசுகிறார். சண்டையை குறைத்தால் நீண்ட நாள் அவரால் விளையாட முடியும் என்றும் , வினோத் பேச்சால் பிரச்சனைக்குள்ளாகலாம்,” என்று தன் கருத்தை பகிர்ந்தார். மற்ற போட்டியாளர்களைப் பற்றி பேசும்போது, “சபரி தன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தவில்லை. கனி முழுவதும் சமையலறையிலேயே இருக்கிறார். வியானா டைட்டில் நிலைக்கு இன்னும் வரவில்லை. கம்ருதீன் சில செயல்களை மாற்றினால் ஃபைனலுக்கு செல்லலாம்,” என்று திவாகர் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.