Pandian Stores 2 Serial Fame Hema Rajkumar debut heroine: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது அதிக குடும்ப தலைவிகள் மற்றும் இளவட்ட ராசிகர்களால். ரசிக்கப்படும் சீரியலாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது பாகம் சீரியலில், முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் தொடர்ச்சியாக நடித்து வருவது நாம் அறிந்ததே.
25
ஹேமா ராஜ்குமார்:
அந்த வரிசையில் ரசிகர்களின் விருப்பமான நடிகையாக மாறியவர் தான் ஹேமா ராஜ்குமார். முதல் பாகத்தில் மீனா என்ற கதாப்பாத்திரம் கொஞ்சம் கடினமான, கோபம் பிடித்த பெண்ணாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது பாகத்தில் அதே மீனா, மிகவும் மென்மையான, அனைவரையும் புரிந்துகொள்ளும், குடும்பத்தை ஒன்றிணைக்கும் பெண்ணாக மாறியுள்ளார். இந்த மாற்றத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புவதால், ஹேமாவுக்கு வரவேற்பு கூடியுள்ளது.
35
நெல்லை பாய்ஸ்
பாண்டியன் ஸ்டோர் மூலம், தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற ஹேமா, தற்போது திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். " இந்த திரைப்படம் ஆணவக் கொலையை மையமாக வைத்து புதிய கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது". ‘நெல்லை பாய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் முதல் எடிட்டிங் வரை கமல் ஜி என்கிற ஒரே நபரே மேற்கொண்டுள்ளார்.
45
புதுமுக ஹீரோ:
இப்படத்தின் நாயகனாக புதுமுகம் அறிவழகன் நடிக்க, நாயகியாக ஹேமா ராஜ்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாதி சார்ந்த பிரிவினைகள் காரணமாக நிகழும் ஆணவக் கொலைகள் தென் தமிழகத்தில் தொடர்ந்து பேசப்படும் சமூக பிரச்சினையாக உள்ளது. அத்தகைய நிஜ சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, காதல் மட்டுமின்றி மனித உறவுகளின் மதிப்பையும் காட்சிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நட்பின் முக்கியத்துவம் எவ்வாறு தலைமுறைகளாக பேணப்பட்டு வருகிறது என்பதையும் படம் வித்தியாசமான கோணத்தில் கூறுகிறது.
55
ஹேமாவுக்கு அடித்த ஜாக்பாட்:
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் ஏற்கெனவே பாராட்டைப் பெற்ற ஹேமா, இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு நுழைவது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான பட பேனர்கள், படக்குழுவின் விளம்பர வீடியோக்கள் ஆகியவற்றில் ஹேமாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, தொடரில் இருந்து திரைக்கு மாறிய முதல் முக்கிய முன்னேற்றம் என்பதால், சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அதே நேரம், ஹேமா ராஜ்குமாருக்கு இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.