'வலிமை' (Valimai movie) திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
28
அவ்வப்போது, இந்த படம் குறித்த... சுவாரஸ்யமான தகவல் வெளியாகி வருவதுடன், அடுத்த வாரம் அதாவது, புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின், ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.
38
மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் மேக்கிங் காட்சிகள் வெளியானது. அதில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
48
இந்நிலையில், இந்த விபத்து குறித்து... ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வினோத் எப்படி இந்த கோர விபத்து ஏற்பட்டது என்பதை கூறியுள்ளார்.
58
இந்த படத்தின் சேஸிங் காட்சிகள் எடுப்பது மிகவும் கடினமானதாவே இருந்தது, எனவே ஓவ்வொரு காட்சியையும் மிகவும் கவனமாகவே எடுத்தோம். இந்த சேசிங் கட்சியை மனதில் வைத்து, புனே அருகில் உள்ள சோலாபூர், ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட பல பகுதிகளில் எடுக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் துரதிஷ்ட வசமாக எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
68
கடைசியில் சென்னை அருகே இருக்கும் மீஞ்சூர் பகுதிகளில் சேசிங் காட்சி எடுக்க அனுமதி கிடைத்தது.எனவே அங்கு தான் படப்பிடிப்பை நடத்தினோம்... அந்த சாலை முடிக்கப்படாமல் மண் நிறைந்த சாலையாக இருந்ததால் சேஸிங் கட்சியின் போது விபத்து ஏற்பட்டதாக ஷாக் தகவலை கூறியுள்ளார்.
78
அஜித்துக்கு எவ்விதமான பாதுகாப்பு நாங்கள் கொடுத்தோமோ அதே போல் அவர் பயன்படுத்திய, பைக்கையும் மிகவும் கவனமுடன் பாதுகாத்து வந்ததாக வினோத் தெரிவித்துள்ளார்.
88
valimai shooting spot photos
இத்தாலி நாட்டைச் சேர்ந்த அந்த பைக், மிகவும் விலை உயர்த்ததாம்... அந்த பைக்கில் சாதாரண இண்டிகேட்டர் உடைந்தால் கூட 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால் தான் இவ்வளவு பாதுகாப்பு என கூறியுள்ளார் இயக்குனர் எச்.வினோத்.