விஜயகாந்த் விஷயத்தில் தவறு செய்த இயக்குனர் விக்ரமன்; அது என்ன தெரியுமா?

Published : Jul 04, 2025, 07:07 PM IST

Vikraman Mistake Vijayakanth Vaanathaippola Movie : விஜயகாந்த் விஷயத்தில் இயக்குநர் விக்ரமன் மிகப்பெரியளவில் தவறு செய்திருக்கிறார். அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

PREV
14
விஜயகாந்த் ஹிட் மூவிஸ்

Vikraman Mistake Vijayakanth Vaanathaippola Movie : விஜயகாந்த் எத்தனையோ படங்களை ஹிட் கொடுத்துள்ளார். அதில் ஒரு படம் தான் வானத்தைப் போல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படங்களில் இந்தப் படமும் ஒன்று தான். குடும்பம் என்றால் என்ன, அண்ணன் தம்பி பாசம், அண்ணி உறவு இப்படி எல்லா பாசத்தையும் ஒரு சேர கொடுத்த படம் தான் வானத்தைப் போல. இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்திருந்த இந்த படத்தில் பிரபு தேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த், ஆனந்தராஜ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

24
விஜயகாந்த் வானத்தைப் போல

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அழகிய காதல் கதையும் இருக்கும். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்த இந்த படத்தின், கதைக்களம் என்றால்.. "ஒரு அண்ணன், தனது 3 தம்பிகளையும் வளர்ப்பதற்காக காதல் - வாழ்க்கை என மொத்தையும் தியாகம் செய்கிறார். அதே போல் தன்னுடைய தம்பிகளை கடைசி வரை ஒற்றுமையாக பார்த்துக் கொள்ள எப்படி கஷ்டப்படுகிறார் என்பதே. இந்த படத்தில் 2 விஜயகாந்த் தவிர... பிரபுதேவா, லிவிங்ஸ்டன், ஆகியோரும் நடித்திருந்தனர்.

34
விக்ரமன் செய்த தவறு

திரையரங்கில் சுமார் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்த, இந்த படம் தற்போது வரை பல அண்ணன் தம்பிகள் விரும்பும் படமாக உள்ளது. இந்த படம் எப்படி ரசிக்கப்பட்டதோ அதே போல் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்தன. காதல் வெண்ணிலா, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, நதியே நயில் நதியே, ரோஜாப்பூ மாலையிலே, தாவணியே என்னை மயக்கிறியே, மைனாவே மைனாவே உள்ளிட்ட இப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களுமே ஹிட் பாடல்கள் தான்.

44
வானத்தைப்போல மற்றும் விக்ரமன்

தமிழில் சிறந்த பொழுதுபொக்கு படத்திற்காக தேசிய விருதை பெற்ற இந்த படத்தில், விஜயகாந்த் விஷயத்தில் தான் ஒரு தவறு செய்துவிட்டேன் என்று அவரே கூறியிருக்கிறார். அதில், அண்ணன் விஜயகாந்துடன் ஒப்பிடும் போது, தம்பி விஜயகாந்திற்கு ஹீரோயிஷம் இல்ல. அதனால், தம்பி விஜயகாந்திற்கு கொஞ்சம் ஹீரோயிஷம் இருக்கிற மாதிரி வச்சிருக்கலாம். படத்திற்கு டப்பிங் பண்ணும் போது தான் எனக்கு இது தோணுச்சு. மறுபடியும் ரீ -ஷூட் பண்ணலாமா? என்று யோசிச்சோம். ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்ல. அதனால் வந்த வரைக்கும் படம் அப்படியே இருக்கடும் என்று விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories