ரசிகர்களின் Heart Beatஐ அதிர வைக்கும் தீபக் சுந்தர்ராஜன் யார் தெரியுமா? விஜய் சேதுபதி படத்தோட இயக்குநரா?

Published : Jul 04, 2025, 06:03 PM IST

Who is Deepak Sundarrajan Heart Beat 2 Director : விஜய் சேதுபதியின் படத்தை இயக்கிய தீபக் சுந்தர்ராஜன் யார், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
18
ஹார்ட் பீட் வெப் சீரிஸ்

Who is Deepak Sundarrajan Heart Beat 2 Director : சினிமாவில் ஒரு இயக்குநராக நீண்ட நாட்கள் நீடிப்பது ரொம்பவே கஷ்டம். கதை எழுதி படம் இயக்கிக் கொண்டே இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலைத்துக் கொண்டிருப்போம். அதற்கு சிறந்த உதாரனம் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் நடிக்காத நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு எத்தனையோ நட்சத்திரங்களை இயக்கி இன்றும் ரசிகர்களின் மத்தியில் நிலைத்து நிற்கிறார்.

28
ஹார்ட் பீட் சீசன் 2

ஒரு சில படங்களே மட்டுமே இயக்கி அந்தப் படங்களும் தோல்வியில் முடிந்தால் அந்த இயக்குநர்களின் நிலைமை என்னாகும் தெரியுமா? அப்படி ஒரு இயக்குநர் இருந்தாரா? அவர் தான் இந்தப் படத்தை இயக்கினாரா என்ற கேள்வி வரும். அப்படித்தான் இந்த இயக்குநர் விஷயத்திலும் நடந்திருக்கிறது. அந்த இயக்குநர் யார், என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

38
இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன்

சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் தான் ஆர் சுந்தர்ராஜன். எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். அதே போன்று எத்தனையோ படங்களை இயக்கவும் செய்துள்ளார். இவருடைய மகன்களில் ஒருவர் தான் தீபக் சுந்தர்ராஜன். இவர் இயக்குநராக அவதாரரம் எடுத்தும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்று வெப் சீரிஸில்கொடி கட்டி பறக்கிறார். ஹார்ட் பீட் என்ர வெப் சீரிசை இயக்கி வருகிறார்.

48
ஆர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன்

கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் தாண்டவம். இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஜெகபதி பாபு, எமி ஜாக்சன், நாசர், சந்தனம், சரண்யா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் தீபக் சுந்தர்ராஜன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தலைவா படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

58
ஹார்ட் பீட் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன்

இந்தப் படத்தையும் இயக்குநர் ஏ எல் விஜய் தான் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்த 2 படங்களின் மூலமாக கிடைத்த அனுபவத்தை வைத்து விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸியை வைத்து அன்னபெல்லி சேதுபதி என்ற படத்தை இயக்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் தீபக் சுந்தர்ராஜிற்கு பெரிய அளவிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

68
ஹார்ட் பீட் சீசன் 2 வெப் சீரிஸ்

இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அதில், ரசிகர்களின் ஹார்ட் பீட்டை பிடித்துக் கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறார். Heart Beat என்ற வெப் சீரிஸின் முதல் பாகத்தை வெற்றிகமாக முடித்துக் கொண்டு இப்போது 2ஆது பாகத்தையும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்து வருகிறார். ஹார்ட் பீட் வெப் சீரிஸின் முதல் சீசன் 100 சீசன்களை வெற்றிகரமாக கொடுத்தது.

78
ஜியோ ஹாட்ஸ்டார் ஹார்ட் பீட் 2 சீசன்

இதனுடைய தொடர்ச்சி தான் தற்போது ஹார்ட் பீட் சீசன் 2ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது வரையில் 28 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.இதில் என்ன தான் இல்லை என்று கேட்கும் அளவிற்கு கிளாமர், ரொமான்ஸ், லவ், ரிலேஷன்ஷ்ப், செண்டி மெண்ட், ஆக்சன், ஃபைட் என்று எல்லா விஷயங்களும் நிறைந்திருக்கும் ஒரு சீரிஸாக இந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரிஸானது முற்றிலும் இளைஞர்களை கவரும் வகையில் ஒளிபரபரப்பாகி வருகிறது.

88
ஹார்ட் பீட் 2 நடிகர், நடிகைகள்

இந்த வெப் சீரிஸ் மூலமாக பிரபலமான யோகலட்சுமி (ஹார்ட் பீட் தேஜூ) டூரிஸ் ஃபேமிலி படத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க மெடிக்கல் டிராமா கதையை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் தீபா பாலு, அனுமோல், அமித் பார்கவ், டி எம் கார்த்திக், கார்த்திக் குமார், கவிதாலயா கிருஷ்ணன், சபரேஷ் (ராக்கி), ஷர்மிளா தாபா (அருணா) என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories