Nayanthara
காதலில் விழுந்து 5 ஆண்டுகள் ஆனாலும், கோலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் சங்கதி ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி விக்கி பகிர்ந்த நயன் குறித்த ரகசியம் ஒன்று வைரலாகி வருகிறது.
Nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர். தற்போது காதலர் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக வேலைகளிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் டிரெய்லர் நேற்று வெளியானது. மிரட்டலான டிரெய்லர் உடன் ஆகஸ்ட் 13ம் தேதி டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டாரில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
Nayanthara
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நயன்தாராவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் விரைவில் திருமணம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும், நயன் - விக்கிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்குள் நயன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் திருமண விவகாரம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
Nayanthara
இயக்குநர் விக்னேஷ் சிவன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவின்றி பதிலளிப்பது என அசத்தி வருகிறார்.
Nayanthara
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதில் ரசிகர் ஒருவர் " உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன? " என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் " இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பார் " என அசத்தியுள்ளார்.