எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு? அவசர அவசரமாக மருத்துவமனை விரைந்த விஜய்சேதுபதி! தற்போதைய நிலவரம் என்ன?

First Published | Mar 12, 2021, 11:41 AM IST

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும், 'லாபம்' படத்தின் இயக்குனர் ஜனநாதனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரை பார்ப்பதற்காக விஜய் சேதுபதி உள்ளிட்ட, பிரபலங்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.
 

தன்னுடைய முதல் படமான, 'இயற்கை' படத்திலேயே... தேசிய விருதை தட்டி சென்றவர் எஸ்.பி.ஜனநாதன். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ஜீவா - நயன்தாரா, நடித்த 'ஈ', ஜெயம் ரவி நடித்த 'பேராண்மை' போன்ற படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வரும், 'லாபம் ' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Tap to resize

திருமணம் ஆகாததால், உதவி இயக்குனருடன் வசித்து வரும் ஜனநாதன், மார்ச் 11 ஆம் தேதி சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வராததாலும், செல் போன் அழைப்பை எடுக்காததாலும் உதவி இயக்குனர்கள் அவரை தேடி வந்தபோது, வீட்டில் மூச்சு பேச்சு இன்றி விழுந்து கிடந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த, இயக்குனர் அமீர், நடிகர் விஜய் சேதுபதி, கரு.பழனியப்பன் ஆகியோர் நேற்று இரவே அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் நீண்ட நேரம் காத்திருந்து, விஜய் சேதுபதி ஜனநாதனை சந்தித்து மருத்துவர்களிடம் இவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலில், மிகவும் மோசமான நிலையில் உள்ள ஜனநாதனுக்கு நரம்பியல் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்களாம். எனினும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இயக்குனர் ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Latest Videos

click me!