ஷங்கர் கொடுத்த பிரம்மாண்ட பர்த்டே பார்ட்டி... படையெடுத்து வந்த கோலிவுட் பிரபலங்கள் - வைரலாகும் Party கிளிக்ஸ்

First Published | Aug 18, 2023, 9:36 AM IST

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் நேற்று தனது 60-வது பிறந்தநாளை கோலிவுட் நட்சத்திரங்களுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

shankar Birthday Party

கோலிவுட்டில் பிரம்மாண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ஷங்கர். ஜெண்டில்மேனில் தொடங்கிய அவரது திரைப்பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நீடித்து வருகிறது. தற்போது கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

shankar Birthday Party

கேம் சேஞ்சர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இதுதவிர கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆனந்த யாழை மீட்டுகிறாய்... அப்பா ஷங்கருடன் கொஞ்சி விளையாடிய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர்!


shankar Birthday Party

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கர் நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

shankar Birthday Party

ஷங்கர் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், தற்போது அவர் தன்னுடைய திரையுலக நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், சசி, வெற்றிமாறன், கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், விக்னேஷ் சிவன், லிங்குசாமி, நடிகர்கள் சீயான் விக்ரம், ராம்சரண், இசையமைப்பாளர் தமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது.

இதையும் படியுங்கள்... 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படக்குழுவினருடன் 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்! போட்டோஸ்..

Latest Videos

click me!