“முண்டாசுப்பட்டி”ன்னு டைட்டில் வச்சது ஏன்?... 6 வருஷத்துக்கு அப்புறம் ரகசியத்தை சொன்ன இயக்குநர்...!

First Published Jun 17, 2020, 6:21 PM IST


நடிகர் விஷ்ணு விஷால் சினிமா கேரியரிலேயே முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்த படத்தின் தலைப்பு தான் ரசிகர்களை படம் பார்க்க தூண்டியது. ஏன் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தார் என அந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் முதன் முறையாக மனம் திறந்துள்ளார். 

நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சிக்காக ராம்குமார் குறும்படமாக எடுத்த முண்டாசுப்பட்டி தான் பின்னாளில் விஷண் விஷாலுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.
undefined
இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியது நம்ம மிர்ச்சி சிவா தானாம். இயக்குநர் குறும்படத்தை படமாக எடுக்க தீர்மானித்ததும் முதலில் மெர்ச்சி சிவாவை தான் அணுகியுள்ளார். ஆனால் வழக்கம் போல தயாரிப்பாளர் கிடைக்க தாமதமானதால் சிவா வேறு படத்தில் கமிட்டாகிவிட, விஷ்ணு விஷாலை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார்.
undefined
போட்டோ எடுத்தால் உயிர் போய் விடும் என்ற மூட நம்பிக்கையை கொண்டிருக்கிறது ‘முண்டாசுப்பட்டி’ கிராமம். அங்கே போட்டோகிராபர்களாகப் புகுந்து விஷ்ணு விஷால், காளி வெங்கட் செய்யும் அதிரிபுதிரி கலாட்டாக்கள்தான் ‘முண்டாசுப்பட்டி’.
undefined
80ஸ் கதைக்களத்திற்கு ஆர்ட் டைரக்டர் கோபி, கேமராமேன் பிவி சங்கரின் அபார உழைப்பு பக்க பலமாக நின்றது.
undefined
படத்திற்கு முண்டாசுப்பட்டி என பெயர் வைத்ததற்கான காரணம் என்ன என்ற ரகசியத்தை இயக்குநர் ராம்குமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டுடைத்துள்ளார்.
undefined
அதாவது விக் வாங்க ஒரு ஆளுக்கு 600 ரூபாய் ஆகும். அப்போ அந்த ஊரில் இருக்குற எல்லாருக்கும் 50 விக் வாங்கனும். குறும்படமாக எடுத்த போது அத்தனை விக் வாங்க எங்களிடம் பணம் இல்லை. அதனால் தான் எல்லார் தலையிலும் முண்டாசு கட்டிவிட்டு,படத்திற்கும் முண்டாசுப்பட்டி என தலைப்பு வைத்துவிட்டேன் என்கிறார்.
undefined
பட்ஜெட் பார்த்து ஷார்ட் ஃபிலிமில் இயக்குநர் செஞ்ச அந்த காரியம் தான் பின்னாளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படத்தை கொடுக்க காரணமாக அமைந்துள்ளது.
undefined
click me!