ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்திருந்ததாக கூறப்பட்டது. முதலில் அவ்வாறு நடிக்க மறுத்ததாகவும், பின்னர் கதையின் முக்கியத்துவம் கருதியே நடிக்க சம்மதித்ததாகவும் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.