மன்னிப்பு கேட்டதற்கான விளக்கம் சின்மயி கொடுக்க வேண்டும் இயக்குநர் மோகன் ஜி!

Published : Dec 03, 2025, 10:28 AM IST

Mohan G Asking Reason For Why Chinmayi Asking Apologize : பின்னணி பாடகி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கான விளக்கம் எனக்கு கொடுக்க வேண்டும் என்று திரௌபதி 2 படத்தின் இயக்குநர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார்.

PREV
17
எம்கோனே பாடல் சர்ச்சை

தமிழ் சினிமாவில் சிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் சின்மயி. இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ள நிலையில் சில வருடங்களாக சின்மயிக்கு பாடல் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் சிம்பு, கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் மூலமாக மீண்டும் பாட ஆரம்பித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற முத்த மழை என்ற பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இதைத் தொடர்ந்து சினிமயிக்கு ஆதரவு குவிந்தது. இதன் காரணமாக மேடை நிகழ்ச்சிகளிலும், புதிய புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு பாட ஆரம்பித்தார்.

27
எம்கோனே பாடல்

அப்படி அவர் பாடிய பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் பாடியதற்கு தான் சினிமயிக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மீண்டும் முதலிருந்தா என்று யோசித்த சின்மயி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் ஏன் மன்னிப்பு கேட்டார், எந்தப் படத்தில் பாடியிருந்தார் என்று பார்க்கலாம். சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் திரௌபதி 2.

37
திரௌபதி 2 முதல் சிங்கிள் லிரிக்

இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷி, வேல ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன், சரவணன் சுப்பையா, நட்டி என்ற நடராஜன் சுப்பிரமணியம், பரணி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த எம்கோனே என்ற பாடலை சின்மயி பாடியிருந்தார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இயக்குநர் மோகன் ஜி படத்தில் சின்மயி பாடியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பலரும் குரல் எழுப்பினர். இதன் காரணமாக சின்மயி மன்னிப்பு கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

47
திரௌபதி 2

அதில், எனக்கு ஜிப்ரானை கிட்டத்தட்ட 18 வருடங்களாக தெரியும். இந்த பாடல் பாடுவதற்கு அழைப்பு வந்தது. நான் சென்று பாடினேன். ஆனால், அவர் அங்கு இல்லை. ஆனால், அந்தப் பாடல் என்ன என்பது இப்போது தான் தெரிந்தது. முன்பே தெரிந்திருந்தால் நான் பாடியிருக்கமாட்டேன். சித்தாந்தம் எனக்கு ஒத்து வராது என்பது தான் நிதர்சனமான உண்மை என்று குறிப்பிட்டிருந்தார்.

57
மன்னிப்பு கேட்ட சின்மயி

இந்த நிலையில் தான் இப்போது இயக்குநர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டு சின்மயி மன்னிப்பு கேட்டதற்கான காரணம் என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பாடல் டியூனாக உருவாகும் போதே நான் இந்தப் பாடலை சின்மயி மேடம் தான் பாட வேண்டும் என்று சொல்லிவிட்டேன். அவர்களது தீவிர ரசிகர் நான். அவர்களது வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், அவரை பாட வைத்தேன். எந்த மாதிரியாக இந்தப் பாடலை பாட வேண்டும் என்று என்னுடைய குழுவில் இருந்தவர்கள் சென்று அவருக்கு சொல்லியிருக்கிறார்கள். 

67
ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்

அதன்படியே அவரும் பாடியிருக்கிறார். பாடலும் வெளியாகிவிட்டது. ஆனால், அதன் பிறகு சின்மயி மேடமை பலம் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் குறிப்பிட்ட மக்களுக்காக மட்டும் படம் எடுப்பார். பெண்களுக்கு எதிராக படம் எடுக்க கூடியவர் என்று பலரும் விமர்சித்து கருத்து பதிவிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அவரும் மன்னிப்பு கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

77
திரௌபதி 2 சின்மயி சர்ச்சை

ஆனால், அவர் எங்களிடம் இதைப் பற்றி கேட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்பது பற்றி யோசித்து இருந்திருக்கலாம். ஏனென்றால் இத்தனை கோடி செலவு செய்து படம் எடுக்கிறோம். அவருடைய இந்த முடிவு படத்திற்கும் படக்குழுவினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. எதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இதற்கான காரணத்தை மட்டும் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி விளக்கம் கொடுக்க விருப்பம் இல்லையென்றால் உங்களது பதிவை நீங்கள் நீக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் படத்தை வியாபார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories