போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு – வீட்டு முன்னாடி போலீஸ் ஜீப் நிற்க வேண்டும்; கதிரின் ஆசை நிறைவேறுமா?

Published : Dec 03, 2025, 09:13 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் போலீஸ் வேலைக்கு எழுத்துத் தேர்வு அறிவித்த நிலையில் கதிர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

PREV
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் ராஜீ தான் காலத்தின் கட்டாயத்தால் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோமதி தான் திருமணம் செய்து வைத்தார். இதுவரையில் குடும்பத்தில் உள்ள மற்ற யாருக்கும் கதிர் மற்றும் ராஜீ திருமணம் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது. மீனாவைத் தவிர, ஒரு கட்டத்தில் அவர்களது திருமணம் எப்படி நடந்தது என்று சொல்ல வேண்டிய சூழல் வந்தது. அப்போதும் கூட சொல்லவில்லை.

25
கதிர் மற்றும் ராஜீ திருமணம்

ஆரம்பத்தில் இருவரும் எலியும், பூனையுமாக இருந்த நிலையில் இப்போது ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாகவும், பாசமாக, காதலுடனும் வாழ்ந்து வருகின்றனர். கதிருக்கு ஏதாவது ஒன்று என்றால் அதனை ராஜீயால் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போன்று தான் ராஜீக்கு ஏதாவது ஒன்று என்றால் அதனை கதிரால் தாங்கிக் கொள்ள முடியாது. கதிர் சொந்தமாக பாண்டியன் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு உறுதுணையாக ராஜீ இருக்கிறார்.

35
ராஜீ போலீசாக வேண்டும்

ஆனால், கதிருக்கு ராஜீ போலீசாக வேண்டும் என்பது தான் ஆசை. அதற்காக அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். இப்போது கூட போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜீ கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் இனிமேல் டிராவல்ஸிற்கு வர வேண்டும் என்றும் கூறினார். ஆனால் ராஜீயோ அப்படியெல்லாம் என்னால் இருக்க முடியாது. நான் டிராவல்ஸிற்கு வருவேன் என்றார்.

45
7 முதல் 8 மணி நேரம் படிக்க வேண்டும்

சரி வா. குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் படிக்க வேண்டும். உனக்கு தேவையான தண்ணீர், சாப்பாடு எல்லாம் உன்னுடைய இடத்தை தேடி வரும். நீ நன்றாக படித்து குடும்பத்தினரின் ஆசியுடன் தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும். அதோடு 2 வீட்டிற்கும் நடுவில் போலீஸ் ஜீப் வந்து நிற்க வேண்டும். அதிலிருந்து நீ கம்பீரமாக இறங்கி நடந்து வருவதை நான் பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று கதிர் தனது ஆசையை வெளிப்படுத்த அப்படியே சிறிது நேரம் ராஜீ உறைந்துவிட்டார்.

55
கதிருடைய கனவு நிறைவேறுமா

கதிருடைய கனவு நிறைவேறுமா? ராஜீ போலீஸ் ஆவாரா என்பது பற்றியெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் நாம் பார்க்கலாம். ஆனால், அதுவரையில் காத்திருக்க வேஎண்டும். தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பார்த்து ரசிக்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories