பிள்ளைகளை பெத்தவங்க புரிஞ்சுக்கணும்; இல்லனா இப்படி தான்: வேதனையில் சரவணன்; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Published : Dec 03, 2025, 08:14 AM IST

Pandian Stores 2 Serial Today 653rd Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 653ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம்.

PREV
18
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான சண்டை தான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எரிமலையாக உருவாகியிருக்கிறது. இப்போது தான் சரவணன் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறார். எப்படியும் இந்த வாரம் சரவணன், தங்கமயிலைப் பற்றி எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவார். இது தொடர்பான புரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது.

28
போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு

இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 653ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். இதில் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் தொடங்கி சரவணன், தங்கமயில் மற்றும் பாண்டியன் ஆகியோர் தொடர்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகிறது. இதில் போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைப் பற்றி ராஜீ மற்றும் கதிர் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சிரித்துக் கொண்டே இருக்க கூடாது, பிறகு விசாரிக்கும் போது இப்படித்தான் சிரித்துக்கொண்டே விசாரிக்க தோன்றும். அப்படியெல்லாம் இருக்க கூடாது. நீ இனிமேல் டிராவல்ஸ் வர வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ படிக்கும் வேலையை மட்டும் பாரு. கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரம் வரையில் படிக்க வேண்டும் என்று ராஜீக்கு கதிர் ஆலோசனை வழங்கினார். மேலும், தனது வீட்டிற்கு முன்பு ஜீப்பில் நீ வந்து இறங்கும் போது எப்படியிருக்கும் என்று கனவில் மிதந்தார்.

38
கடையில் வைத்து சரவணன் – தங்கமயில் சண்டை

இதைத் தொடர்ந்து சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் கடையில் வைத்து சண்டை போட்டுக் கொள்ளும் காட்சி ஒளிபரப்பானது. இதில், பாண்டியன் இருக்கும் போதே அவர் கண் முன்னே இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர். பாண்டியன் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

48
செந்தில் மற்றும் மீனா சாப்பாடு

அடுத்ததாக செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில், லெமன் சாதமும், உருளைக்கிழங்கு வருவலும் சாப்பிட கொண்டு வந்த செந்தில் சாப்பிடும் போது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க, மீனாவின் போன் வருகிறது. ஏனென்றால் லெமன் சாதம் சாப்பிட நல்லாவே இல்ல. இதை சாப்பிட்டால் அவ்வளவு தான். அதை சொல்லத்தான் போன் போட்டேன் என்று மீனா கூறினார்.

58
கடைக்கு வந்த மாணிக்கம்

கடைக்கு வேலைக்கு வந்த தனது அப்பாவை அங்கிருந்து துரத்திவிடுவதில் மயில் குறியாக இருந்தார். ஏற்கனவே கடையிலிருந்து எடுத்துக் கொண்டு சென்ற ரூ.10,000 பணத்தை இன்னும் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் மறுபடியும் கடைக்கு வந்தால் ரூ.20000 காணாமல் போகும் என்றார். அப்போது வந்த சரவணன் தனது மாமனார் என்று கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் பேசி அவரை அங்கிருந்து துரத்திவிட்டார்.

68
தெருவில் வைத்து நடந்த தங்கமயில் சரவணன் சண்டை

அப்பாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று தங்கமயில் சொல்ல, நீயும் அப்படியே போயிரு, உன்னுடைய வீட்டிற்கு போனாலும் சரி, இல்ல என்னுடைய வீட்டிற்கு போனாலும் சரி, உன்னுடைய முகத்தை என்னால் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது என்று சரவணன் கூறிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் அங்கு வந்தார். டேய் சரவணன், என்னடா தெருவில் வைத்து சண்டை போட்டுக்கொண்டிருக்க என்று கேட்க, அப்பா இவளை வீட்டிற்கு போக சொல்லுங்கள் என்று சொல்ல பாண்டியனும் அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறகு அப்பாவும், மகனும் பேசிக்கொண்டனர்.

78
கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன்

இதுக்குத்தான் கல்யாணம் பண்ணுனயா என்று பாண்டியன் கேட்க, நான் கலுயாணம் வேண்டாம் என்று தான் சொன்னேன். நீங்கள் தான் நான் சொன்னதை கேட்கவே இல்லை. என்ன பிரச்சனை என்று சொன்னால் மட்டும் அதை புரிந்து கொண்டு சரி பண்ண போறீங்களா? அப்பா உங்களுக்கு எதுவுமே புரியாது. என்னை குறை சொல்வதைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு புரியாது அப்பா என்று மன வேதனையோடு சரவணன் பேசினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது.

88
சரவணன் இன்னும் உண்மையை சொல்லவில்லை

ஆனால், சரவணன் இன்னும் உண்மையை சொல்லவில்லை. எஞ்சிய நாட்களில் தங்கமயில் பற்றிய உண்மை வெளிவரும். அதன் பிறகு குடும்பத்தினர் என்ன செய்வார்கள், தங்கமயிலை அவரது வீட்டிற்கு அனுப்பி வைப்பார்களா? அல்லது விவாகரத்து செய்யப்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories