"விஜய் தவறான ரூட்டில் போறாரு.. ரொம்ப வருத்தமா இருக்கு" - ஆவேசப்படும் இயக்குனர் மோகன் ஜி!

First Published | Sep 17, 2024, 10:54 PM IST

Director Mohan G : பிரபல இயக்குனர் மோகன் ஜி, தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து இப்பொது கருத்து தெரிவித்துள்ளார்.

GOAT Movie

பிரபல நடிகர் தளபதி விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியலில் விரைவில் களமிறங்க போகிறார் என்கின்ற செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த செய்திகளை நிஜமாக்கும் வகையில் இந்த 2024ம் ஆண்டு துவக்கத்தில் தனது "தமிழக வெற்றிக்கழகம் கட்சி" குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். ஆனால் அரசியலில் பயணிக்க தொடங்கிய பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியது தான் விஜயின் "மாஸ்டர் ஸ்ட்ரோக்காக" பார்க்கப்பட்டது.

மகன்களின் பிரச்சனை.. "உண்மை என்னனு தெரியாம பேசாதீங்க" கோபத்தில் சீரிய மனோவின் மனைவி!

Thalapathy 69

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், அண்மையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்" திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்த திரைப்படம் உலக அளவில் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தனது 69வது மற்றும் இறுதி திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். தளபதி 69 திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Latest Videos


TVK Leader Vijay

இந்நிலையில் விஜயின் அரசியல் வருகை பலரது மத்தியில் வரவேற்பை பெற்றாலும், தொடர்ச்சியாக சில அரசியல் தலைவர்களும், சினிமா பரபலங்களும் அவர் மீது குறிப்பிடத்தக்க வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு பல அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் அதற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக ஓணம் பண்டிகைக்கு அவர் வாழ்த்து தெரிவித்தது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூட இதுகுறித்து தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். 

Director Mohan G

இந்த சூழலில் பிரபல இயக்குனர் மோகன் ஜி இன்று வெளியிட்ட ஒரு பதிவில், "விஜய் போல புகழ்மிக்க மனிதர்கள் அரசியலுக்கு வருவது நல்லது தான். குறிப்பாக தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு பிடித்த ஒரு தலைவர் அரசியலில் களம் இறங்குவது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். ஆனால் விஜய் சார் இப்பொழுது போகின்ற ரூட் தவறாக இருக்கிறது, அது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொன்னது தான் என்னை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது" என்று இயக்குனர் மோகன் ஜி பேசியிருக்கிறார்.

சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்; சீக்கிரம் ஒரு கதை ரெடிபண்ணுக.. தமிழ் இயக்குனருக்கு Jr என்.டி.ஆர் வேண்டுகோள்!

click me!