இயக்குநர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி' உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி, பின்னர் இயக்குனராக மாறியவர் மாரிசெல்வராஜ்.
இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடக்சன் மூலம் தயாரித்திருந்தார்.
2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு, மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி, பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. மாரி செல்வராஜையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது இந்த திரைப்படம்.
இந்நிலையில் இவர் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான 'கண்டா வரச்சொல்லுடா' பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாரிசெல்வராஜ் - திவ்யா தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் திவ்யா மாரி செல்வராஜ்.
இதையடுத்து இவருக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவரைகளை வாழ்த்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கர்ணன் படத்தை தொடர்ந்து, மாரி செல்வராஜ் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.