விட்ஜா என்கிற இலங்கையை சேர்ந்த, தமிழ் பெண் பிரபல நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70 ,40,000 பெற்று மோசடி செய்துவிட்டதாகவும், பின்னர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஆர்யா மீது விட்ஜா ,பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன் லைன் வழியாக தற்போது இந்த புகாரை அளித்துள்ளார். பண பரிவர்த்தனை குறித்த, அனைத்து தகவல்களையும் ஆதாரத்துடன் தன்னுடைய புகாரில் இணைத்துள்ளார் விட்ஜா.
இது குறித்து விட்ஜா கூறுகையில், ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் தான் பணி புரிவதாகவும், கொரோனா பிரச்சனை காரணமாக படங்கள் இல்லாததால், பண கஷ்டத்தில் வாடுவதாக தன்னிடம் ஆர்யா பணத்தை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறி, பணத்தை பெற்று ஆர்யா மோசடி செய்துள்ளதாக விட்ஜா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை போல் பல பெண்களிடம் இவர் தன்னுடைய வேலையை காட்டியுள்ளார். இதுகுறித்து நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஆர்யாவின் தாயார் மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆர்யாவை பற்றி நான் புகார் கொடுத்தால் அவர் தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடியும், அவை அனைத்தையும் நான் கண்டுகொள்ளாமல் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இந்த புகாரை கொடுத்துள்ளதாகவும், இந்த விஷயம் குறித்து பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டால் தான் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா தமிழ்நாடு முதலமைச்சர் தனிபிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ் - க்கு விட்ஜா தனது புகாரை அனுப்பியுள்ளார் , எனவே விரைவில் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஆர்யா, மற்றும் நடிகை சாயிஷாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது, இலங்கை பெண் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மை என்ன என்பது விரைவில் தெரியவரும்.