Lokesh Kanagaraj Statement About Coolie Movie : கூலி படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கூலி LCU படமா இல்லாம..சூப்பரா இருக்கும்..!உழைத்த அனைவருக்கும் நன்றி.. லோகேஷ் உருக்கம்!
2025 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக உலகளவில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படமாக கூலி படம் இருக்கிறது. அந்தளவிற்கு படத்தின் புரோமோஷன் படத்தைப் பற்றி அதிகளவில் பேச வைத்துள்ளது. இயக்குநர் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்த பெரிய நம்பிக்கை ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷனில் நாளை வெளியாக இருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் கூலி.
25
கூலி LCU படமா இல்லாம..சூப்பரா இருக்கும்..!
முழுக்க முழுக்க உழைக்கும் வர்க்கத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், காளி வெங்கட், நாகர்ஜூனா, சௌபின் ஷாகிர், ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், மோனிகா பிளெசி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
35
ரஜினிகாந்த் அண்ட் லோகேஷ் கனகராஜ் – கூலி படம்
ஏற்கனவே இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற நிலையில் படம் குறித்து கூறிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். படம் நாளை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் மீதான கைப்பை லோகேஷ் கனகராஜ் மேலும் எகிற வைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் கூலி படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் இப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் அல்லாமல் தனித்துவமான படமாக அதுவும் தலைவருக்கான படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
45
ரஜினியின் கூலி நாளை ரிலீஸ்
மேலும், தனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தலைவர் ரஜினிகாந்த் சாருக்கு என் இதயப்பூர்வமான நன்றி. இந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக உருவாக்கி கொடுத்த நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சோபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசர், அமீர் கான் ஆகியோருக்கு நன்றி. அதோடு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் எனக்கு உறுதுணையாக இருந்து என்னுடன் பணியாற்றிய எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி.
55
கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கருத்து
எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை வெற்றிகரமாக முடிக்க அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறன் அவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் என்று ஓவ்வொருவரையும் குறிப்பிட்டு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். கடைசியாக கூலி என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கான தனித்துவமான படம் என்று குறிப்பிட்டுள்ளார்.