Published : Jun 06, 2022, 10:58 AM ISTUpdated : Jun 06, 2022, 11:00 AM IST
Thalaivar 169 : தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன்.
24
டார்க் காமெடி ஜானரில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி ரிலீசானது.
34
விமர்சன ரீதியாக இப்படம் கடும் சறுக்கலை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து நஷ்டம் இன்றி தப்பித்தது. இதையடுத்து ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது.
44
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்துள்ளாராம். இவர் திரைக்கதையில் நெல்சனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படம் மோசமான திரைக்கதை காரணமாகத் தான் சறுக்கலை சந்தித்தது, அதன்காரணமாகவே தற்போது கே.எஸ்.ரவிக்குமாரை ரஜினி களமிறக்கி உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.