தனது தனித்திறமையால் சினிமா உலகில் முன்னணி நடிகையானவர் சியான் விக்ரம். சேது, காசி, பிதாமகன் என மாறுபட்ட தோற்றங்களில் வந்து ரசிகர்களை கவர்ந்த இவரின் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்கள் வெளியாகியிருந்தது.
bhagyaraj 3.6.9
இந்நிலையில் பிரபல இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள் விக்ரம் குறித்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது. தற்போது 3.6.9 என்னும் படத்தில் நடித்துள்ளார். 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இந்த படம் உலக சாதனைக்காக காத்திருக்கிறது. பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் – பிரைடே பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சிவா மாதவ் இயக்கியுள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் டெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
bhagyaraj 3.6.9
அந்த விழாவில் இயக்குனர் கே பாக்யராஜ், இசையமைப்பாளர் தீனா, பாண்டியராஜன், ப்ளாக் பாண்டி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய பாக்கியராஜ், உழைப்பை விட ஒற்றுமை தான் பெரிது. இதன் காரணமாக படம் கட்டாயம் வெற்றி பெறும். இதில் இசையமைப்பாளர் தான் ஹீரோ. சில நல்ல விஷயங்களுக்காக நான் பிடிவாதமாக இருப்பேன் என் பிடிவாதத்தின் காரணமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் அருமையாக வந்துள்ளது என கூறியுள்ளார்..
மேலும் செய்திகளுக்கு...Brahmastra movie OTT release date : பிரம்மாஸ்திரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
bhagyaraj 3.6.9
மேலும் பாண்டியராஜன் சொன்னது போல எனக்கு 180 டிகிரி பற்றி எல்லாம் தெரியாது. சினிமாவில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுதான் வரவேண்டும் என்றால் யாராலும் முடியாது. அதற்கு ஆயுதம் பத்தாது. மனிதன் என்னவெல்லாம் கற்பனை செய்கிறானோ அது ஒரு நாள் விஞ்ஞானமாக வரும் என்பதுதான் எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டியது என கூறியுள்ளார்.
bhagyaraj 3.6.9
அதோடு நடிகர் விக்ரம் எத்தனை படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கான நேரம் வரும்வரை காத்திருந்தார். சரியான நேரம் வரும்போது தான் எல்லா சரியாக அமையும். அதுவரை தனக்கான உழைப்பை விக்ரம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதுபோல உங்கள் உழைப்பை நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என பேசி உள்ளார்.