மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் எச்.வினோத், இது ரீமேக் படமா என்கிற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
விஜய் மில்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் எச்.வினோத். இவர் சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அவர் இயக்கிய இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் அஜித்துடன் கூட்டணி அமைத்த வினோத், அவரை வைத்து தொடர்ச்சியாக நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
25
எச்.வினோத் பேச்சு
பின்னர் கமல்ஹாசனுடன் இணையவிருந்த எச்.வினோத், அந்த படம் டிராப் ஆனதை தொடர்ந்து தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை இயக்க கமிட் ஆனார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து அதைப் பற்றி எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் மெளனம் காத்து வந்த எச்.வினோத், மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அனல்பறக்க பேசி இருக்கிறார். மேலும் படத்தை பற்றி பரவலாக பேசப்படும் வதந்திகளுக்கெல்லாம் இந்த ஆடியோ லாஞ்சிலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எச்.வினோத்.
35
வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஜனநாயகன் படத்தை பற்றி அதிகம் பரவிய வதந்தி என்னவென்றால், இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது தான். அதுகுறித்து ஆடியோ லாஞ்சில் பேசிய எச்.வினோத், நிறைய பேர் சொல்றாங்க ஜனநாயகன் ஒரு ரீமேக் படம்னு, சிலர் இது பாதி ரீமேக்னு சொல்றாங்க. அவங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது 100 சதவீதம் தளபதி படம். 100 சதவீதம் சுவாரஸ்யமான படத்தை பார்க்கப் போகிறோம் என்கிற மனநிலையில் வாங்க எனக் கூறி ரீமேக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அதேபோல் ஜனநாயகன் படம் முன்ன பின்ன இருக்கும், உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம் தான். அய்யா இது தளபதி படம் என எச்.வினோத் கூறி இருக்கிறார். இதன்மூலம் அவர் சூசகமாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை தாக்கி பேசி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். படத்தில் ரசிகர்கள் ஆடி, பாடி கொண்டாடும் தருணங்கள் நிறைய இருக்கிறது என்பதையும் உறுதிபட கூறி உள்ளார் எச்.வினோத்.
55
தளபதிக்கு எண்டே கிடையாது
தொடர்ந்து பேசிய அவர், இது விஜய் சாரோட ஃபேர்வல் படம், அதனால் படத்தின் கடைசி 15 நிமிடங்கள் அதற்கான காட்சிகள் இருக்கும் என சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை தான் இருக்கும். ஏனெனில் தளபதிக்கு எண்டே கிடையாது. இதுதான் அவரோட பிகினிங். படத்தில் அமைதியாக உட்கார்ந்து யோசிப்பதற்கு நிறைய மொமண்ட்ஸ் இருக்கிறது” என எச்.வினோத் கூறி உள்ளார். அவரின் பேச்சு ரசிகர்களை தெளிவுபடுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.