சௌந்தர்யாவின் மரணத்தை 10 வருடத்துக்கு முன்னரே தெரிந்து கொண்டாரா அவரின் தந்தை?

Published : Mar 27, 2025, 08:21 PM ISTUpdated : Mar 27, 2025, 08:23 PM IST

நடிகை சௌந்தர்யாவின் மரணம் குறித்து அவருடைய அப்பா 10 வருடங்களுக்கு முன்னரே கணித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.  

PREV
16
சௌந்தர்யாவின் மரணத்தை 10 வருடத்துக்கு முன்னரே தெரிந்து கொண்டாரா அவரின் தந்தை?

நடிகை சௌந்தர்யா தனது அழகு மற்றும் திறமையால், 90'ஸ் காலகட்டத்தில் மாஸ் ஹீரோக்களுக்கு எல்லாம் ஜோடியாகவே நடித்தார். தமிழில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், கார்த்திக் ஆகியோரது படங்களில் நடித்துள்ளார் சௌந்தர்யா. பெற்றார்.
 

26
விபத்தில் உயிரிழந்த சௌந்தர்யா:

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகை தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த காலத்தில் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் தான் சௌந்தர்யாவின் மரணம் குறித்து அவரது தந்தை சத்யநாராயணா முன்னரே அறிந்திருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நேச்சுரல் பியூட்டி சௌந்தர்யா நடிக்க மறுத்த சூப்பர் ஹிட் மூவி எது தெரியுமா?
 

36
திரிபுரானேனி சிட்டிபாபு கூறிய ரகசியம் q

இது குறித்து தயாரிப்பாளர் திரிபுரானேனி சிட்டிபாபு கூறியிருப்பதாவது: சினிமா துறையில் நுழைந்ததிலிருந்து நான் சௌந்தர்யாவையும் அவருடைய தந்தையையும் அறிந்தவன். சௌந்தர்யாவின் தந்தைக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு, அவரது ஜாதகம் ஜோதிடரிடம் சத்யநாராயணா காட்டினார். சௌந்தர்யா திரையுலகில் நுழைந்தால், வெல்ல முடியாத கதாநாயகியாக மாறுவாள். அவர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவர் பத்து ஆண்டுகள் மட்டுமே இந்தத் துறையில் இருப்பார் என்று கூறியுள்ளனர்.
 

46
10 வருடத்தில் சௌந்தர்யாவுக்கு இருந்த ஆபத்து:

பத்து வருஷத்துக்கு அப்புறம் சௌந்தர்யாவுக்கு பெரிய ஆபத்து இருப்பதாகவும் சொன்னாங்களாம். இந்த விஷயங்களை சத்யநாராயணா, தயாரிப்பாளர் சிட்டிபாபு கூட பகிர்ந்து கொண்டாராம். ஆனா அவங்களுக்கு ஆபத்து இருக்குற விஷயத்தை மட்டும் மறைமுகமா சொன்னாராம். பத்து வருஷத்துக்கு அப்புறம் சௌந்தர்யா இண்டஸ்ட்ரிக்கு தூரம் ஆயிடுவாங்கன்னு சொன்னாராம். அன்னைக்கு சௌந்தர்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அதனால அப்படி சொன்னார் என்று நினைச்சேன். ஆனா அவங்க இறந்து போனதுக்கு அப்புறம் அவர் சொன்ன வார்த்தைகளோட அர்த்தம் தெரிஞ்சுதுன்னு சிட்டிபாபு கூறியுள்ளார். 

படையப்பா பட நடிகை சௌந்தர்யா நடிக்க பயந்த படம் எது தெரியுமா?
 

56
சௌந்தர்யா சொன்ன வார்த்தை

சௌந்தர்யாவை திருமணமான பிறகு ஒரு முறை சந்தித்தேன். உன் அம்மா - அப்பா சொன்ன எல்லாமே உன் வாழ்க்கையில நடக்குது. தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றார்கள். நீங்கள் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், மோகன்லால் என அனைத்து மொழிகளிலிருந்தும் நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்து விட்டீர்கள். நீங்கள் இண்டஸ்ட்ரியிலிருந்து விலகி உங்களது குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்கள் என்று சொல்லியுள்ளார். இதற்கு சௌந்தர்யா இல்ல சார் என்னால் முடிந்தவரை சினிமாவில் நடிப்பேன் என சொல்லி இருக்கிறார்.
 

66
இந்த விஷயம் தவறு என நிரூபிப்பேன்:

அதே போல் என்னுடைய அப்பா சொன்னது எல்லாமே நடந்திருக்கிறது. இது ஒன்னு தவறு என்று நான் நிரூபிப்பேன். சாகும் வரையில் சினிமாவில் தான் இருப்பேன் என்று சொன்னாராம். மேல ததாஸ்து தேவதைகள் ஆசீர்வாதம் பண்ணாங்களோ என்னவோ நடிகையா இருக்கும்போதே அவங்க இறந்து போய்ட்டாங்கன்னு சிட்டிபாபு கூறியிருக்கிறார். 

நடிகை 2 மாத கர்ப்பம்; பண்ணை வீட்டில் கிலோ கணக்கில் தங்கத்தால் அலங்காரம் செய்த நடிகர்?

Read more Photos on
click me!

Recommended Stories