Anna Serial: வெங்கடேஷ் நெஞ்சில் காலை வைத்த சண்முகம்; பஞ்சாயத்தில் நடிக்க போவது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் ரத்தனாவுக்காக பஞ்சாயத்து கூடும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் ரத்தனாவுக்காக பஞ்சாயத்து கூடும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.
'அண்ணா' சீரியலின் இன்றைய எபிசோடில், ரத்னா நிரந்தரமாக வெங்கடேஷை விட்டு விலக வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்தை கூட்டுகிறான் சண்முகம். அந்த பஞ்சாயத்துக்கு வெங்கடேஷ் குடும்பத்தை வரச்சொல்ல முத்துப்பாண்டி கிளம்ப, சண்முகமும் உடன் வருவதாக சொல்கிறான். அதற்க்கு முத்து பாண்டி நீ வர வேண்டாம் நான் போய் சொல்லிட்டு வரேன் என்று சொல்கிறான்.
சண்முகம் நான் எதுக்கு வர கூடாது என்று கேட்க, நீ வந்தா எல்லாத்துக்கும் கை நீட்டிடுவ, அதனால நானே போய் சொல்லிட்டு வரேன் என கூறுகிறான். முத்துப்பாண்டி, வெங்கடேஷ் குடும்பத்தை பஞ்சாயத்துக்கு வர சொல்ல . வெங்கடேஷின் அப்பா - அம்மா நாங்க எதுக்கு பஞ்சாயத்துக்கு வரணும்? கோவமாக பேசுகிறார்கள்.
Anna Serial: ரிலீஸ் ஆன வெங்கடேஷ்; ரத்னா விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த சண்முகம்?
வெங்கடேஷ் கையில் கட்டையுடன் முத்துபாண்டியை அடிக்க வர, முத்துப்பாண்டி கட்டையை பிடித்து நான் இப்போ போலீசா வரல... ஆனால் வெங்கடேஷ் உன்ன உயிரோட விடமாட்டேன் என முத்து பாண்டியை அடிக்க கட்டையை ஓங்க, சண்முகம் அதிரடியாக உள்ளே புகுந்து அவனை எட்டி உதைக்க வெங்கடேஷ் சோபா மீது விழுகிறான். அவன் நெஞ்சில் காலை வைத்து, ஏன் மச்சனையே அடிக்கிறியா? ஒரு போலீஸ்காரன் மேலை கைய வைக்க உனக்கு எவ்வளவு தில் இருக்கணும் என பேசிவிட்டு நீ நாளைக்கு பஞ்சாயத்துக்கு வரணும் என கோவமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறான்.
அடுத்து, சண்முகம் வீட்டில் எல்லாரும் பஞ்சாயத்துக்கு கிளம்ப... சண்முகம் கத்தியை எடுத்து வைப்பதை பார்த்த பரணி திட்டி கத்தியை வைக்க சொல்கிறாள். இதனால் கத்தியை எடுத்து வைக்கும் சண்முகம் அவள் சென்ற பிறகு மீண்டும் எடுத்து கொள்கிறான். அதே போல் முத்துபாண்டியும் துப்பாக்கியோடு பஞ்சாயத்துக்கு கிளம்புகிறான்.
Anna Serial: சௌந்தரபாண்டி சொன்ன விஷயம்; சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் அப்டேட்!
வெங்கடேஷ் சௌந்தரபாண்டிக்கு போன் செய்து உதவி கேட்க அவர் நாலு ரவுடியுடன் பஞ்சாயத்துக்கு வந்து இறங்குகிறான். வெங்கடேஷ் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று டிராமா போன, சண்முகம் அவனை அடிக்க பாய்வதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது. நாளைய தினம், என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.