இந்த ஆண்டு குழந்தை பெற திட்டமிட்டு இதெல்லாம் செய்தாரா சமந்தா? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

First Published | Oct 10, 2021, 8:24 PM IST

நடிகை சமந்தா (Samantha Ruth prabhu) , குழந்தை பெற்றுக்கொடுக்காமல், கருவை கலைத்தார் என பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளத்தில் சுற்றிவந்த நிலையில், தற்போது சமந்தா இந்த ஆண்டு குழந்தை பெற திட்டமிட்டிருந்ததாக 'சாகுந்தலம்' (sakunthalam) பட தயாரிப்பாளர் நீலிமா குணா (Neelima guna) உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சமந்தா - நாக சைதன்யாவின் திடீர் விவாகரத்து முடிவு, தற்போது வரை அவர்களது ரசிகர்களால் மட்டும் அல்ல, குடும்பத்தினர், மற்றும் நண்பர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

எனினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே பல கட்ட ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்ததாக தங்களது அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

Tap to resize

அதே போல், தற்போது வரை விவாகரத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே தெரிவிக்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் இதுகுறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார்கள்.

அதே நேரம் சமந்தா - நாக சைதன்யா பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில், அதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க... சாகுந்தலம் பட தயாரிப்பாளர் நீலிமா, இந்த ஆண்டு குழந்தை பெற திட்டமிட்டு என்னவெல்லாம் செய்தார் என கூறியுள்ளார்.

‘சாகுந்தலம்’ படத்தில் சமந்தாவை நடிக்க வைப்பதற்காக நானும் என்னுடைய தந்தை குணசேகரும் சமந்தாவை அணுகியபோது அவருக்கு கதைப் பிடித்திருந்தது. ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க முடியுமா? என்று கேட்டுக்கொண்டார்,.

நானும் தன்னுடைய கணவரும் குழந்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், அதற்க்கு தான் நான் முன்னுரிமை அளிப்பேன். குழந்தைப் பிறந்தால் அதுவே என்னுடைய உலகமாக மாறிவிடும், எனவே சாகுந்தலம் ஒரு பீரியட் படம் என்பதால் கையெழுத்து போடா தயங்கினார்.

ஆனால், திட்டமிட்டப்படி படத்தை முடிப்போம் என்றபிறகே கையெழுத்திட்டார். இதுதான் அவரது கடைசிப்படம் என்றும் அதன்பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு குழந்தை பெற்ற பிறகே, மீண்டும் நடிப்பேன் என்பது போல் அவர் கூறியதாகவும் நீலிமா தி நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றியில் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!