Dharsha Gupta :சேலையில் வளச்சு வளச்சு இடுப்பை காட்டி லைக்ஸை அள்ளும் தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Published : May 22, 2022, 07:57 PM IST

Dharsha Gupta : ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸும் பச்சை நிற சேலையும் அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

PREV
15
Dharsha Gupta :சேலையில் வளச்சு வளச்சு இடுப்பை காட்டி லைக்ஸை அள்ளும் தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

கோவையை சேர்ந்த மாடல் அழகியான தர்ஷா குப்தா, சீரியல் நடிகையாக சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து மின்னலே, செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இவர் சீரியல்களில் நடித்திருந்தாலும் இவரை பேமஸ் ஆக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். 

25

இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை தர்ஷா குப்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அந்தவகையில், திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ருத்ரதாண்டவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தர்ஷா. 

35

இதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற நகைச்சுவை படத்திலும் நடித்து முடித்துள்ளார். கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் தர்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர மேலும் சில படங்களில் கமிட் ஆகி உள்ளார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தாவை இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

45

அவர்களை குஷிப்படுத்தும் விதமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வரும் தர்ஷா, தாவணி, சேலை போன்ற பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி, ஜீன்ஸ், ஸ்கர்ட், பிகினி போன்ற மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி அனைத்திலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

55

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸும் பச்சை நிற சேலையும் அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் இடுப்பழகில் சிம்ரனையே மிஞ்சி விடுவார் போல என கமெண்ட் போட்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... ‘நெஞ்சுக்கு நீதி’யில் உதயநிதி உடன் நடிக்க மறுத்த அருள்நிதி... அந்த நல்ல வாய்ப்பை தட்டிதூக்கியது யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories