நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்த சோகத்தில் ஒரு காதல் தோல்வி பாடல் எழுதி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுஷ் திறமை வாய்ந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவர் ஒரு சக்சஸ்ஃபுல் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது தவிர தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பாடலாசிரியர் ஆகவும் தனுஷ் ஜொலித்துள்ளார். அவர் சினிமாவில் முதன் முதலில் பாடல் எழுதிய படம் மயக்கம் என்ன. செல்வராகவன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் ‘காதல் என் காதல் அது கண்ணீருல’ என்கிற காதல் தோல்வி பாடலை எழுதியிருந்தார் தனுஷ். அப்பாடல் ஹிட்டானதால் அதில் மற்றும் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். அப்படி இரண்டாவதாக அவர் எழுதிய பிறை தேடும் என்கிற பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
24
பாடலாசிரியராக ஜொலிக்கும் தனுஷ்
இதன்பின்னர் தனுசுக்கு அடுத்தடுத்து பாடல் எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் வைரல் ஹிட்டானது. இதனால் பாடலாசிரியராகவும் கவனம் ஈர்த்தார் தனுஷ். சந்தோஷம், சோகம், காதல் தோல்வி என எந்த ஒரு சிச்சுவேஷனாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் லிரிக்ஸ் எழுதிக் கொடுத்து அசத்திய தனுஷ், தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து பெற்று பிரிந்த சோகத்தில் இருந்தபோது அவருக்கு ஒரு காதல் தோல்வி பாடல் எழுத அழைப்பு வந்திருக்கிறது.
34
தனுஷ் எழுதிய லவ் பெயிலியர் சாங்
ஏற்கனவே மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த தனுஷ், அந்த சிச்சுவேஷனில், தன் மனதில் ரணமாய் இருந்த வலிகளை பாடல் வரிகளாக கொட்டி இருக்கிறார். அப்படி பிரிவின் ஆழத்தை விவரிக்கும்படி தனுஷ் எழுதிய பாடல் தான் தேன்மொழி என்கிற பாட்டு. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம் பெறும் இப்பாடல் தனுஷின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு பாடலாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு பல காதல் தோல்வி பாடல்களை தனுஷ் எழுதியிருந்தாலும் இந்தப் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால், அதில் எவ்வளவு ஃபீலிங்சை தனுஷ் கொட்டியிருக்கிறார் என்பது தெரியும்.
தனுஷும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சுமார் 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் விவாகரத்து முடிவு கோலிவுட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு பின்னரும் தங்களின் மகன்களுக்காக இருவரும் ஒன்றாக பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு. இருப்பினும் அவர்களின் விவாகரத்து முடிவுக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளிவரவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.