விஜயகாந்த் படத்தின் பாட்டை சுட்டு டியூன் போட்ட ரஹ்மான்?! நேரில் கூப்பிட்டு கேள்வி கேட்ட கவிஞர் வாலி.! என்ன நடந்தது தெரியுமா?

Published : Feb 25, 2026, 11:36 AM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'சிக்குபுக்கு ரயிலே' பாடல் உருவானபோது, அதன் மெட்டு விஜயகாந்த் படப் பாடலை ஒத்து இருப்பதாகக் கூறி கவிஞர் வாலி அவரை அதிரவைத்த சுவாரசியமான பின்னணியையும், அது குறித்த தற்போதைய விவாதத்தையும் இக்கட்டுரை விளக்குகிறது.

PREV
15
சுவாரஸ்யமான தகவல்.! கேட்டா அசந்துடுவீங்க.!

தமிழ் சினிமாவின் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் மீது இதுவரை பெரிய அளவில் காப்பி சர்ச்சைகள் வந்ததில்லை. ஆனால், சமீபத்தில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அளித்த பேட்டி ஒன்றில், ரஹ்மானுக்கும் கவிஞர் வாலிக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான மோதலைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

25
பின்னணி என்ன?

இயக்குநர் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான முதல் படம் 'ஜென்டில்மேன்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற "சிக்குபுக்கு ரயிலே" பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப் பாடலுக்கு வரிகள் எழுத கவிஞர் வாலி வந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

35
ரஹ்மானை மிரளவைத்த வாலி!

ரஹ்மான் மெட்டுக்கு வாலி என்ன எழுதிக் கொடுத்தாலும், ரஹ்மானுக்கு அது திருப்தி அளிக்கவில்லையாம். "இன்னும் புதுசா வேணும், வேற மாதிரி வேணும்" என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டே இருந்தாராம். ஒரு கட்டத்தில் கடுப்பான வாலி, ரஹ்மானிடம் "முதல்ல நீ போட்டு வச்சிருக்க டியூனை ஒழுங்கா வாசி" என்று கேட்டிருக்கிறார். ரஹ்மானும் அந்தப் பாடலின் தத்தகாரத்தை (சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே...) வாசித்துக் காட்டியுள்ளார்.

45
விஜயகாந்த் படப் பாடல்?

அதை உன்னிப்பாகக் கேட்ட வாலி, சட்டென்று ரஹ்மானிடம், "ஏய்.. இது ஒன்னும் புதுசு இல்லையே! நீ வாசிச்சது 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை... செய்யலாமா சண்டித்தனம் எதிரே...' அப்படிங்கிற பாட்டோட டியூன் மாதிரியே இருக்கே" என்று போட்டு உடைத்துள்ளார்.

வாலி குறிப்பிட்ட அந்தப் பாடல், விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'மாநகரக் காவல்' படத்தில் இடம்பெற்ற ஒரு பிரபலமான பாடல். ரஹ்மான் மிகவும் 'புதுசு' என்று சொன்ன மெட்டு, பழைய பாடலின் சந்தத்தை ஒத்திருப்பதாக வாலி சுட்டிக்காட்டியதும் அங்கிருந்தவர்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

55
காப்பியா? சந்தமா?

இயக்குநர் வெங்கடேஷ் இந்தப் பகீர் தகவலைப் பகிர்ந்துள்ள நிலையில், ரஹ்மான் ரசிகர்கள் இதற்கு விளக்கம் அளித்து வருகின்றனர். "சிக்குபுக்கு ரயிலே" மற்றும் "வண்டிக்காரன் சொந்த ஊரு" ஆகிய இரண்டு பாடல்களும் ஒரே ‘சந்தத்தில்’ அமைந்திருக்கலாமே தவிர, அவை ஒரே டியூன் கிடையாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

உதாரணத்திற்கு, "மின்னலே நீ மின்னலே" பாடலின் மெட்டில் "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" என்ற பாடலைப் பாடினால் பொருந்திப்போகும். அதற்காக அது காப்பி ஆகிவிடாது; அது பாடலின் 'மீட்டர்' சம்பந்தப்பட்டது என்கிறார்கள் இசை ஆர்வலர்கள். எது எப்படியோ, "புதுசா வேணும்" என்று கேட்ட ரஹ்மானையே, பழைய பாடலைச் சொல்லி வாலி மிரளவைத்த இந்தச் சம்பவம் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories